ஆப்கன்: தாலீபன்கள் தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலி -7 பேர் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ மையத்தை குறிவைத்து தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும், 7 ராணுவ வீரர்களை தாலிபன்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ளராணுவ மையத்தின் மீது தலீபான் தீவிரவாதிகள் இன்று அதிகாலைத் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அங்கிருந்த 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 ராணுவ வீரர்களை தாலிபன் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.
இத்தகவலை அம்மாகாண அரசு உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் உள்ள காஜியாபாத் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. தலீபான்களால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்களை மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications