For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலைமை மோசம்.. தலிபான் சுப்ரீம் தலைவர் சுட்டுக் கொலை?.. துணை பிரதமர் சிறைவைப்பு? என்ன நடக்கிறது?

தாலிபான் சுப்ரீம் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

காபூல்: தலிபான் சுப்ரீம் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா கொல்லப்பட்டு விட்டதாகவும், துணை பிரதமர் முல்லா பரதர் பிணை கைதியாக கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட நிலையிலும்கூட, இன்னமும் ஆட்சி அமைக்க முடியவில்லை.. ஏகப்பட்ட குழப்பம் அந்நாட்டு அரசியலில் நிலவி வருகிறது..

இத்தனைக்கும் கெடு விதிக்கப்பட்டு, அமெரிக்க படைகள் வெளியேறிவிட்ட பிறகும்கூட, அந்நாட்டு அரசு திணறி கொண்டிருக்கிறது.

10 நாளில் 15 கொலைகள்.. எங்கே செல்கிறது தமிழகம்?.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பி.எஸ் அட்வைஸ்!10 நாளில் 15 கொலைகள்.. எங்கே செல்கிறது தமிழகம்?.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பி.எஸ் அட்வைஸ்!

 தாலிபான்கள்

தாலிபான்கள்

காரணம், தாலிபான்களுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டுள்ளது.. இது அதிகார மோதல் ஆகும்.. பதவி சண்டை ஆகும்.. ஒருவழியாக இடைக்கால பிரதமர் மற்றும் 33 அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெயரை தாலிபான்கள் வெளியிட்டது... அதில்தான் முல்லா ஹாசன் அகுண்ட் இடைக்கால பிரதமர் என்றும், முல்லா கானி பராதர் நாட்டின் துணை பிரதமர் என்றும் அறிவிக்கப்பட்டது.

 அறிவிப்பு

அறிவிப்பு

இதில், முல்லா கானி தான் பிரதமர் என்று நினைத்தனர்.. ஆனால் துணை பிரதமர் பதவிதான் தரப்பட்டது. ஹிபதுல்லா அகுண்ட்சாடா நாட்டின் உச்சபட்ச தலைவராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரு அறிவிப்பு வந்தபிறகுதான் மேலும் விவகாரம் வெடித்தது..

Recommended Video

    Taliban அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்த China, Pakistan சிறப்பு தூதர்கள்.. உருவாகும் புதிய கூட்டணி?
     அரசியல் மோதல்

    அரசியல் மோதல்

    அரசியல் மோதல் அதிகமானது.. முல்லா கானி பராதாருக்கு பிரதமர் பதவி கிடைக்க விடாமல் செய்ததே ஹக்கானி சகோதரர்கள் தான் என்றும், முல்லா ஹாசன் அகுண்டை பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் ஒரு காரணம் சொல்லப்பட்டது.. அதுமட்டுமல்ல, அந்த சகோதரர்கள்தான் பராதரை தாக்கிவிட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. தற்போது நிலைமை என்னவென்றால், பராதாரை அவர்கள்தான் கடத்தி தனி இடத்தில் வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

     செய்திக்குறிப்பு

    செய்திக்குறிப்பு

    தலிபான் சுப்ரீம் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா கொல்லப்பட்டதாகவும், துணை பிரதமர் முல்லா பரதர் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.. இதுதொடர்பாக வெளியான செய்தியில், "தலிபான் தீவிரவாதிகளின் இரண்டு பிரிவுகளுக்கிடையே அதிகார போட்டி வலுத்துள்ளது... தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா சுட்டு கொல்லப்பட்டார்.

     சிறுபான்மை சமூகம்

    சிறுபான்மை சமூகம்

    ஹக்கானி பிரிவுடனான சண்டையில் முல்லா பரதர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார்... தலிபான் அமைச்சரவையில் தலிபான் அல்லாத மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவருக்கு பதவி கொடுக்க வேண்டும்.. அப்போதுதான், நம்முடைய அரசை பிற நாடுகள் அங்கீகரிக்கும் என்று வலியுறுத்தி வந்தார்... ஆனால், இவரது கருத்து எடுபடாமலேயே போய்விட்டது.. அவரையும் சில நாட்களாக காணவில்லை.

     பிணைக்கைதி

    பிணைக்கைதி

    இதற்கு பிறகு, கந்தகாரில் தான் இருப்பதாக சொல்லி ஒரு வீடியோவையும் வெளியிட்டார்.. ஆனால்,இவர் பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.. ஹக்கானிக்கு பிரிவுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடி தொடர்பு உள்ளது... தலிபான் அரசில் ஹக்கானிஆதிக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது... ஆக மொத்தம் தாலிபான்களிடம் மோதல் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    English summary
    Taliban chief dead, Baradar hostage? Reports suggest big leadership crisis in Afghanistan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X