ஒரே ஜாலி.. தெருக்களில் ஆட்டம் போடும் தாலிபான்கள்.. பியூட்டி பார்லர்களில் பெண்கள் போட்டோவும் அழிப்பு
தாலிபான்கள் குஷியுடன் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகிறது
காபூல்: தாலிபன்கள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், அந்த வீடியோவில், ரயில்வே தண்டவாளங்கள், சில தெருக்களில் தாலிபான்கள் உற்சாக மிகுதியில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Recommended Video
20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்க படைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட தாலிபன்கள், தற்போது 20 நாட்களில் தங்கள் தேசத்தை மறுபடியும் கைப்பற்றிவிட்டனர்..
உலகின் வல்லரசான அமெரிக்க ராணுவமானது, அதிநவீன போர்க்கருவிகள், சக்தி வாய்ந்த போர் விமானங்கள் உட்பட அத்தனையும் பெற்றிருந்தும், கடைசியில் வெறும் 75 ஆயிரம் பேர் கொண்ட தாலிபன் படையை வீழ்த்த முடியாமல் போனது.. இது முக்கிய தோல்வியாகவே கருதப்பட்டு வருகிறது

பயம் - அச்சம்
ஆப்கானிஸ்தான் முழுவதையுமே தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.. அதிபர் அஷ்ரப் கானி ராஜினாமா செய்துவிட்டு.. நாட்டை விட்டும் போய்விட்டார்.. இனி வருங்காலம் என்னாகுமோ என்று அந்த நாட்டு மக்கள், தாலிபான்களை நினைத்து பயந்து அந்நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

அறிவிப்பு
அமைதியான ஆட்சி தருவோம் என்று தாலிபன்கள் அறிவித்த போதும் யாரும் அதை நம்பவில்லை.. பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவித்தபோதும், அதையும் தாலிபன்கள் நம்பவில்லை.. பெண்களுக்கு அரசாங்கத்தில் பணி என்று அழைப்பு விடுத்தும் அதையும் யாரும் நம்பவில்லை.. ஒருவித பதற்றம் மக்களிடம் தொற்றி கொண்டுள்ளது.

அமெரிக்கர்கள்
ஆப்கனில் சிக்கியுள்ள தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்து வருகின்றன. அங்கு பணியாற்றிய அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்... இதனிடையே, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவில், ரயில்வே தண்டவாளங்கள், சில தெருக்களில் தாலிபான்கள் உற்சாக மிகுதியில் டான்ஸ் ஆடுகிறார்கள்..

விளையாட்டு
தாலிபன்களை குறித்து நாடே உற்று நோக்கி வருகிறது.. ஆனால், அவர்களோ, ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்கள்.. அங்குள்ள பார்க்குகளுக்கு சென்று விளையாடி கொண்டும், சவாரி செய்து கொண்டும், குதிரைகளில் ஏறி வலம் வந்தும், மின்சார பம்பர் கார்களில் சவாரி செய்தும் குஷியாக காணப்படுகின்றனர்.. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

சாப்பாடு
காபூலை சேர்ந்த ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் ஹமீத் ஷாலிசி என்பவர் இதுகுறித்து ஒரு ட்வீட் போட்டு, அந்த வீடியோக்களையும் அதில் பதிவிட்டுள்ளார்.. இந்த வீடியோவிலும், தாலிபான் போராளிகள் சிலர் தங்கள் கையில் ஆயுதங்களுடன் சுற்றி வருகின்றனர்... மேலும் சிலர் ஜிம்களிலும் உடற்பயிற்சி செய்து கொண்டே மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகின்றனர்.. இன்னொரு வீடியோவில், தாலிபான் உறுப்பினர்கள் ஒரு வீட்டிற்குள் கும்பலாக நின்று கொண்டு சாப்பிடுகிறார்கள்..

போட்டோக்கள்
நாங்கள் பொதுமக்களை எதுவும் செய்ய மாட்டோம், அனைவரும் பயப்படாமல் இருக்கலாம் என்று அறிவித்தும்கூட யாருக்கும் அங்கு பயம் குறையவில்லை.. காரணம், 2 விதமான தகவல்கள் வெளியாகி உள்ளன.. அங்குள்ள பியூட்டி பார்லர்கள், மற்றும் பொது இடங்களில் உள்ள பெண்களின் போட்டோக்களை பெயிண்ட் கொண்டு அழிக்கும் பணிகளில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனராம்..

வீடியோ
அதுமட்டுமல்ல, நாங்கள் உங்களை பாதுகாப்பதற்காக தான் வந்திருக்கிறோம் என்று சொல்லி, பொதுமக்களிடம் இருக்கும் ஆயுதங்களை வீடு வீடாக சென்று கைப்பற்றியும் வருகிறார்களாம்.. சாதாரண போக்குவரத்து மீறல்களுக்காககூட, அந்த மக்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்துகிறார்களாம்.. இப்படி பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பது, மேலும் பரபரப்பை கூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications