For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருட்டு.. ஆப்கனில் 4 பேரின் கைகளை கொடூரமாக வெட்டி தள்ளிய தாலிபான்கள்.. பதைபதைக்கும் பின்னணி! ஷாக்

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தான் குற்றங்களில் ஈடுபட்டு வருவோருக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டு வுருகிறது. அதன்படி பொதுவெளியில் கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை வழங்கப்பட்டு வரும் நிலையில் தான் தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் திருட்டு, கொள்ளை குற்றச்சாட்டில் தொடர்புடைய 4 பேரின் கைகள் கொடூரமான முறையில் துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை அமெரிக்க படைகள் முடிவுக்கு கொண்டு வந்தன. இதையடுத்து கடந்த 2021ல் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவில் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறின.

இதையடுத்து தாலிபான்கள் மீண்டும் உள்நாட்டு போரை துவங்கி அங்கு நடந்த ஆட்சியை கவிழ்த்தனர். இதையடுத்து தற்போது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.

வேலையை காட்டிய தாலிபான்.. இனி படிக்கவே கூடாது.. மூடப்பட்ட பல்கலை. கதவுகள்.. கதறி அழும் பெண்கள்! வேலையை காட்டிய தாலிபான்.. இனி படிக்கவே கூடாது.. மூடப்பட்ட பல்கலை. கதவுகள்.. கதறி அழும் பெண்கள்!

ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாடுகள்

ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாடுகள்

கடந்த 1996 முதல் 2001 வரை ஏற்கனவே நாட்டை தாலிபான்கள் ஆட்சி செய்த நிலையில் தற்போது 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளன. தாலிபான்கள் ஆட்சியில் கட்டுப்பாடுகள் அதிகமாக குறிப்பாக பெண்களுக்கு எதிராக கடுமையாக இருக்கும் என்பதால் ஏராளமானவர்கள் நாட்டை விட்டு அவசரஅவசரமாக வெளியேறினர். இதை பார்த்த தாலிபான்கள் கடும் கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படாது என தெரிவித்தனர். இருப்பினும் கூட அடுத்த சில மாதங்களில் தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர்.

எதிர்ப்புகளை சம்பாதிக்கும் தாலிபான்கள்

எதிர்ப்புகளை சம்பாதிக்கும் தாலிபான்கள்

பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா அணிய வேண்டும். பூங்கா, ஜிம் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லக்கூடாது, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களிலும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெண்கள், ஆண்கள் போராடினாலும் கூட தாலிபான்கள் தங்களின் முடிவை மாற்றி கொள்ளவில்லை. இதனால் உலகளவில் தாலிபான்கள் தொடர்ந்து எதிர்ப்பை சம்பாதித்து வருகின்றனர்.

 கொடூர தண்டனைகள் அமல்

கொடூர தண்டனைகள் அமல்

இது ஒருபுறம் இருக்க குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் கடும் தண்டனைகள் வழங்கப்படுவது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. குற்றம் செய்தவர்களுக்கு பொதுவெளியில் கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை அளிக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேருக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கைகளை வெட்டிய தாலிபான்கள்

கைகளை வெட்டிய தாலிபான்கள்

அதன்படி கந்தஹாரில் உள்ள அகமது ஷாஹி மைதானத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். தாலிபான் அதிகாரிகளும் அங்கு குவிந்திருந்தனர். இந்த வேளையில் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் 4 பேரின் கைகளை அவர்கள் வெட்டி துண்டித்தனர். இதுதொடர்பான படங்கள் தற்போது இணையதளங்களி்ல வெளியாகி உள்ள நிலையில் மனித உரிமைகள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

English summary
While Afghanistan is ruled by the Taliban, strict restrictions are being imposed on women, and severe punishments are being given to those involved in crimes. According to this, while flogging, amputation of hands and feet, and death penalty are being given in public, the incident of brutal amputation of the hands of 4 people in front of thousands of people has caused great shock.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X