ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கொடூரம்.. பொதுமக்கள் முன்னிலையில் பிணைக் கைதிகள் 12 பேர் சுட்டு படுகொலை
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாங்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த 12 பேரை சுட்டுப் படுகொலை செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள், அரசு படையினருடன் கடுமையாக சண்டையிட்டு பல நகரங்களை பிடித்து வருகின்றனர். மேலும், குண்டூஸ் நகரில் நெடுஞ்சாலைகளில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில் தலிபான்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த 12 பேரை சுட்டுக் கொன்றதாக அதிர்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ராணுவ அதிகாரி குலாம் முகமது தஹிரி கூறுகையில், அந்தர் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் 12 பிணை கைதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். அதில் 7 போலீஸார், 3 பாதுகாப்பு படையினர், 2 உளவுத் துறை அதிகாரிகள் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் தலிபான் தீவிரவாதிகளால் சமீபத்தில் பிணை கைதிகளாக கடத்தப்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.
மேலும், இந்த சம்பவத்தை உள்ளூர் மக்களை நேரடியாக வந்து பார்க்குமாறு தலிபான்கள் நிர்ப்பந்தித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications