பாக்., அடுத்த அடி.. இந்தியாவை போல் தண்ணீருக்கு ‛செக்' வைக்கும் ஆப்கன்.. புதிய அணை கட்டும் தாலிபான்
காபூல்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு தாலிபான்கள் உரிய பதிலடி கொடுத்தனர். கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தலையீடு செய்து மோதலை முடிவுக்கு கொண்டு வந்தன. இந்நிலையில் தான் பாடம் புகட்டும் வகையில் நம் நாட்டை பின்பற்றி பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த ஆப்கானிஸ்தான் குணார் ஆற்றுக்கு குறுக்கே புதிய அணை கட்டும் பணியை தொடங்க உள்ளது. இதற்கான உத்தரவு அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக நம் நாடு உரிய முறையில் பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் கதிகலங்கிப்போனது. நம் நாடு அடித்த அடியில் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. போரை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து போர் முடிவுக்கு வந்தது.

முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நம் நாடு அதிரடியாக நிறுத்தியது. சிந்து நதி தண்ணீர் பாகிஸ்தானின் உயிர் நாடியாகும். பாகிஸ்தானின் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நதி நீரை தான் நம்பி உள்ளனர். தற்போது சிந்து நதி நீர் கிடைக்காமல் அவர்கள் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதன் அடுத்தக்கட்டமாக தான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு ‛செக்' வைத்துள்ளது. இருநாடுகளும் அண்டை நாடுகளாக உள்ளன. எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. ஆனால் தற்போது இருநாடுகள் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. கடந்த சில வாரங்களாக மோதல் கடுமையாக வலுத்தது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினரின் இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு ஆப்கானிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்தது. எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த தாலிபான்கள் மற்றும் ராணுவத்தினர் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை கொன்று குவித்தனர். மேலும் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. இருநாடுகள் இடையே போர் ஏற்படும் சூழல் வந்தது.
இதையடுத்து பாகிஸ்தான், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிடம் பேசி மோதல் வலுக்காமல் தடுக்க கெஞ்சியது. இதையடுத்து கத்தார், சவுதி அரேபியா மத்தியஸ்தம் செய்தது. தாலிபான்கள், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பேசி மோதலை முடித்து வைத்தது. இருப்பினும் இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தற்போது ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் காய்கறிகள், பழங்கள், அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றின் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் உணவு பொருட்களின் விலை எகிற தொடங்கி உள்ளது. ஒரு கிலோ தக்காளி பாகிஸ்தான் கரன்சியில் ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக இந்தியா பாணியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்க முடிவு செய்துள்ளது.
அதாவது ஆப்கானிஸ்தானில் இருந்து குனார் ஆறு வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த தாலிபான்கள் முடிவு செய்துள்ளன. இதற்காக குனார் ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தாலிபான்கள் முடிவு செய்துள்ளன. குனார் ஆற்றில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்க ஆப்கானிஸ்தானின் உச்சபட்ச தலைவர் மவ்வலி ஹிபதுல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார்.
இதனை ஆப்கானிஸ்தானின் தகவல் தொடர்பு துறையின் துணை அமைச்சர் முஹாஜர் ஃபராஹி தனது எக்ஸ் பக்கத்தில் , ‛‛ஆப்கானிஸ்தானின் உச்சபட்ச தலைவர் அகுண்ட்சாடா நீர் மற்றும் எனர்ஜி அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். குனார் ஆற்றில் எவ்வளவு விரைவாக அணை கட்ட முடியுமோ அவ்வளவு விரைவாக அணையை கட்டி முடிக்க வேண்டும். இந்த பணிக்கான ஒப்பந்தத்தை உள்ளூர் நிறுவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்'' என்று கூறியுள்ளார்.
இதுபற்றி லண்டனில் உள்ள ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் சாமி யூசுப்சாய் கூறுகையில், ‛‛இந்தியாவுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கான தண்ணீரை தடுத்த நிறுத்துகிறது. குனார் ஆற்றில் அணை கட்ட ஆப்கானிஸ்தானின் உச்சபட்ச தலைவர் நீர் மற்றும் எரிசக்தி துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த பணிக்கான ஒப்பந்தத்துக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்காக காத்திருக்காமல், உள்நாட்டு நிறுவனங்களும் மேற்கொண்டு பணியை தொடங்க கூறியுள்ளார்'' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மே மாதம் குனார் ஆற்றில் தாலிபான்கள் அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தனர். பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்த அணை கட்டும் நோக்கத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின. தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குனார் ஆற்று தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை.
இதனால் ஆப்கானிஸ்தான் குனார் ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இந்த குனார் ஆற்றை எடுத்து கொண்டால் அது ஆப்கானிஸ்தானில் பிறக்கிறது. வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலை தான் குனார் ஆற்றின் பிறப்பிடமாகும். இது, பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. மொத்தம் 450 கிலோமீட்டர் தூரம் வரை பாய்கிறது.
பாகிஸ்தானின் ப்ரோகில் கணவாய் பகுதி குனார் ஆறு பிறக்கும் இடத்தில் இருந்து பக்கத்தில் தான் உள்ளது. இந்த குனார் ஆறு இந்து குஷ் மலையில் பிறந்து ஆப்கானிஸ்தானின் குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்கள் வழியாக தெற்கு நோக்கி பாய்ந்து பாகிஸ்தானுக்கு செல்கிறது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா வழியாக ஜலாலாபாத் நகருக்கு அருகில் காபூல் நதியுடன் இணைகிறது. அங்கு இந்த குனார் ஆறு சித்ரால் நதி என்று அழைக்கப்படுகிறது. இந்தஆறு கைபர் பக்துன்வா மாகாணத்தின் நீர்ப்பாசனம் மற்றும் பிற நீர் தேவைகளுக்கு முக்கியமானது. இதனால் இந்த குனார் ஆற்றின் குறுக்காக பாகிஸ்தான் அணை கட்டும் பட்சத்தில் பாகிஸ்தான் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications