ஆடம்பரங்களுக்கு இடமில்லை... ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டத்தின் ஆட்சி... தலிபான்கள் திட்டவட்டம்..!

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் என்றும் அதன்வழி வாழ்க்கை முறை ஒழுங்குபடுத்தப்படும் எனவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

Recommended Video

    Afghanistan-ல் மீண்டும் Sharia சட்டம்: முன்பு Taliban பெண்களுக்கு என்ன கட்டுப்பாடுகள் விதித்தார்கள்?

    இதன் மூலம் தங்களின் அடிப்படைவாதத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை உலக நாடுகளுக்கு அவர்கள் உணர்த்தியுள்ளனர். கடந்தகாலத்தில் நடைபெற்ற தலிபான்கள் ஆட்சியை போல் இல்லாமல் இம்முறை எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் வழங்கப்படும் என தலிபான்கள் அறிவித்த நிலையில், பெண்களே இல்லாத வகையில் அமைச்சரவை முதல் அரசு நிர்வாகம் வரை ஆப்கனில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    Taliban says, the rule of Shariat law in Afghanistan

    இதனிடையே பெண்களின் உரிமைகளை பறிக்காமல் நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் தலிபான்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பிரதமரும், தலிபான் அமைப்பின் தலைவருமான முல்லா ஹசன் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில், ஷரியத் சட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.

    இஸ்லாமிய சட்டங்களுடன் முரண்பாடு இல்லாத வகையில் உள்ள சர்வேத நாடுகளின் ஒப்பந்தங்கள், சட்டங்கள் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், இனி வரும் நாட்களில் அரசு நிர்வாகம் மற்றும் வாழ்க்கை முறை ஷரியத் சட்டத்தின் படி ஒழுங்குபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஷரியத் என்றால் நேர் வழி என்று பொருள். இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட காரியங்களை ஒருவர் செய்தால் அதை ஷரியத் சட்டப்படி தண்டிப்போம் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளனர் தலிபான்கள். உதாரணத்துக்கு மது அருந்துதல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதை அருந்துவோர் மீது ஷரியத் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

    பெண்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றலாம், படிக்கச் செல்லலாம் என கடந்த வாரம் தலிபான்கள் அறிவித்திருந்தாலும் இன்னும் அது தொடர்பான முழுமையான வழிகாட்டுதலை அவர்கள் வெளியிடவில்லை. இதனால் பெண்களின் சுதந்திரமும், அவர்களுக்கான உரிமைகளும் ஆப்கனில் கேள்விக்குறியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஷரியத் சட்டத்தை சவுதி அரேபியா உள்ளிட்ட இன்னும் சில அரபு நாடுகள் பின்பற்றினாலும், அங்கெல்லாம் பெண்ணுரிமைகள் மறுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே முந்தைய அரசு மேற்கொண்டு வந்த வர்த்தக ஒப்பந்தம், உலக நாடுகளுடனான நட்புறவு ஆகிய விவகாரங்களில் தலிபான்கள் என்ன நிலை எடுக்கப்போகிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+