'டிட்டோ' ஈரான்.. யார் இந்த ஹெபதுல்லா.. தாலிபான்களின் சுப்ரீம் தலைவர் இவராமே.. பரபர பின்னணி
தாலிபான்களின் சுப்ரீம் தலைவராக ஹெபதுல்லா நியமனம் செய்யப்படுவாராம்
காபூல்: தாலிபான்களின் சுப்ரீம் தலைவராக ஹெபத்துல்லா அஹுன்ஸாடா இருப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. அதற்கான பேச்சுவார்த்தைகளிலும், ஏற்பாடுகளிலும் தாலிபான்கள் மும்முரமாகி வருகின்றனர்.
Recommended Video
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு செல்ல வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாகவே அதாவது ஆகஸ்ட் 30-ம்தேதி, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின...
இதனால் அங்கிருக்கும் மக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயந்து கொண்டு, தப்பித்து செல்ல முயற்சித்து வருகின்றனர்... சாதாரண மக்கள் முதல், அரசியல் கட்சி தலைவர்கள், எம்பிக்கள் என எல்லாருமே பயந்து போய் உள்ளனர்.. இவர்களும் வெளிநாடுகளில் தஞ்சம் புக முயன்று வருகிறார்கள்...

தாலிபான்கள்
ஆனால், இதையெல்லாம் தாலிபான்கள் கண்டுகொள்ளவே இல்லை.. ஆட்சி அமைக்கும் அடுத்தக்கட்ட வேலைகளில் இறங்கி விட்டனர்.. அதற்கான ஏற்பாடும் நடந்துவருகிறது.. ஏற்கனவே இது சம்பந்தமாக பேசி முடிவு எடுக்கவே, பிரத்யேகமாக ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதன்படியே பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன...

பேச்சுவார்த்தை
அதேசமயம் ஈரான் நாட்டில் உள்ளதைபோலவே, ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்களாம்.. அநேகமாக செப்டம்பர் 3-ம் தேதி, ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதாக அறிவிப்பார்கள் என்று ரஷ்ய செய்தி நிறுவனமும் தகவல் வெளியிட்டிருந்தது. அதேபோல, தாலிபன்களின் தலைவராக முல்லா ஹெபத்துல்லா அஹுன்ஸாடா என்பவரை புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள்..

புதிய தலைவர்
தாலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி என்பவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்...இவர் சொல்லும்போது, "நாங்கள் அறிவிக்கும் இஸ்லாமிய அரசானது, மக்களுக்கு நிச்சயம் ஒரு முன்மாதிரியாக விளங்கும்.. அரசாங்கத்தில் விசுவாசமான தளபதியான ஹெபத்துல்லா அஹுன்ஸாடா இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.. அவர்தான் புது அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராக இருப்பார்.." என்றார்.

போட்டோ
ஹெபதுல்லா சுப்ரீம் தலைவர் என்றால், இவருக்கு கீழேதான் அதிபர் அல்லது பிரதமர் நியமிக்கப்படுவாராம்... ஹெபதுல்லா பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியாதாம்.. ஒரேஒருமுறைதான் இவர் போட்டோவை தாலிபான்கள் வெளியிட்டிருந்தனர்.. இப்போது அரசு அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தாலும்கூட, ஹெபதுல்லா போட்டோவை அவர்கள் இன்னமும் வெளியிடவில்லை...

யார் இவர்?
1990ம் ஆண்டு முதலே தாலிபான் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டவர் ஹெபதுல்லா.. மதம் தொடர்பான விவகாரங்களை கவனித்து வந்துள்ளார்.. 1995ல் தாலிபான்கள் ஃபரா மாகாணத்தை கைப்பற்றியதுமே, அங்கு ஷர்யா சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும் பொறுப்பு ஹெபதுல்லாவுக்குதான் அப்போது வழங்கப்பட்டிருக்கிறது..

முல்லா மன்சூர்
1996-ல் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, ராணுவ நீதிமன்றத்தில் வேறு வகையான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.. இதற்கு பிறகு தாலிபான்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும்கூட, ஹெபதுல்லாவுக்கு தனி செல்வாக்கு அங்கு எப்போதுமே இருக்கிறதாம். 2015ல் முல்லா மன்சூரின் தளபதியானார் ஹெபதுல்லா.. 2016?ல் முல்லா மன்சூரின் இறந்ததுமே தாலிபான் இயக்கத்தின் தலைமை தளபதியானார்... இவரை போலவே இவரது மகனும் அங்கு ரொம்ப பிரபலமாம்.. பெயர் அப்துல் ரஹ்மான்.. 23 வயதுதான் ஆகிறது..

சுப்ரீம் தலைவர்
2017ல் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ராணுவ தளத்தின் மீது தாலிபான்களின் தற்கொலை படை தாக்குதலை முன்னின்று நடத்தியதே அப்துர் ரஹ்மான்தானாம்.. ஆனால், அந்த தாக்குதலிலேயே அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துவிட்டனர்.. அப்துர் ரஹ்மான் இறந்ததுமே, ஏற்கனவே இருந்த ஹெப்துல்லாவின் செல்வாக்கு மேலும் உயர்ந்துவிட்டது.. இப்படி தாலிபான்களிடம் நீங்கா புகழை இப்போது முதல் பெற்று வருகிறார் ஹெப்துல்லா.. இவர்தான் அடுத்த சுப்ரீம் தலைவர் என்பதால், அந்த நாட்டில் எதிர்பார்ப்பு பன்மடங்காக எகிறி உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications