அன்று அமெரிக்க படைகளை அலறவிட்ட ஸ்னைப்பர்.. இன்று ஆப்கன் நகரின் மேயர்.. யார் இந்த மொஹிபுல்லா
காபூல்: தாலிபான் படையில் முக்கிய ஸ்னைப்பராக இருந்த மொஹிபுல்லா மோவாஃபக், இப்போது ஃபர்யாப் மாகாணத்தின் தலைநகரான மேமானாவின் மேயராக மொவாஃபாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கன் நாட்டில் கடந்த ஆகஸ்ட்டில் அஷ்ரப் கானி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டு, தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.
புதிய தாலிபான் அரசு அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைந்து ஆட்சியைத் தரும் எனத் தாலிபான்கள் கூறி வந்தாலும் கூட அவர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியானது.

மேயர்
இந்நிலையில், மேமனா நகரத்தின் புதிய மேயராக தாலிபான்கள் படையின் முக்கிய ஸ்னைப்பர் வீரராக இருந்த மொஹிபுல்லா மோவாஃபக் என்பவரை தாலிபான் அமைப்பு நியமித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆட்சியைப் பிடிக்கும் வரை தமுல்லா மொஹிபுல்லா மோவாஃபக் தாலிபான் அமைப்பின் ஸ்னைப்பராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாலிபான் ஆட்சி அமைந்து 3 மாதங்களுக்கு பின்னர், கடந்த நவம்பரில் வடமேற்கு ஆப்கானிஸ்தானின் ஃபர்யாப் மாகாணத்தின் தலைநகரான மேமானாவின் மேயராக மொவாஃபாக் நியமிக்கப்பட்டார்.

முக்கிய ஸ்னைப்பர்
தாலிபான் அமைப்பின் முக்கிய போராளிகளில் ஒருவராக மொஹிபுல்லா மோவாஃபக் அறியப்பட்டார். போர் சமயத்தில் களத்தில் தொடர்ந்து போரிட்டு வந்த மொஹிபுல்லா மோவாஃபக், இப்போது அலுவல் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார். மேமானா நகரில் சாக்கடை பிரச்சினை, சாலைகள் உட்பட அனைத்து விதமான பிரச்சினைகளையும் மொஹிபுல்லா மோவாஃபக் தான் இப்போது கவனித்து வருகிறார். இது தொடர்பாக 25 வயதான மொஹிபுல்லா மோவாஃபக் கூறுகையில், "போர் களத்தில் வெளிநாட்டு வீரர்களை ஒழிக்க நான் போரிட்டேன். இப்போது ஊழலை ஒழித்து எனது நகரத்தை சிறப்பானதாக மாற்ற பணியாற்றுகிறேன்" என்றார்.

மக்கள் பாராட்டு
இந்த புதிய மேயர் உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, அலுவலகத்திலேயே அமர்ந்து கொள்பவர் இல்லை. ஒவ்வொரு நாளும் மேமனா தெருக்களில் நடந்து செல்லும் புதிய மேயர், நகராட்சி ஊழியர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நகரத்தில் வசிப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் மொஹிபுல்லா மோவாஃபக்கிடம் புகார் அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய மேயர் இளமையானவராகவும் நன்கு படித்தவராகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், நகரத்தில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொண்டு அதைத் தீர்க்க சிறப்பான நடவடிக்கைகளை மொஹிபுல்லா மோவாஃபக் எடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

யார் இவர்
மொஹிபுல்லா மோவாஃபக் தனது 19 வயதில் தாலிபான் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரது செயல்பாடுகளைக் கண்டு, விரைவில் அவர் ஃபர்யாப் மாகாணத்தில் உள்ள சிறிய பிரிவின் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். தாலிபான் அமைப்பின் மிகச் சிறந்த ஸ்னைப்பர்களில் ஒருவராக மொஹிபுல்லா மோவாஃபக் அறியப்படுகிறார். போர் களத்தில் பல முறை அமெரிக்க வீரர்களை மொஹிபுல்லா மோவாஃபக் துல்லியமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அவரை அறிந்தவர்கள் பாராட்டுகின்றனர். இவரைத் தான் இப்போது மேமனா நகரின் மேயராக தாலிபான் அமைப்பு நியமித்துள்ளது.
Recommended Video

பெண் உரிமை
தாலிபான் அமைப்பு கடந்த ஆகஸ்டில் ஆட்சியைப் பிடித்த உடன் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர். ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து படிக்கும் முறைகளுக்குத் தடை விதித்த தாலிபான்கள், அலுவலகங்களில் பணிபுரியப் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இருப்பினும், மொஹிபுல்லா மோவாஃபக் தனது அலுவலகத்திலும் சரி, பிராந்தியத்திலும் சரி இதுபோல எந்தவொரு கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. அங்குப் பெண்கள் வழக்கம் போல வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இது போன்ற பல நடவடிக்கைகள் அவரை மற்ற தாலிபான் தலைவர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்டுவதாக அந்நகரில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications