ஆப்கனில் விரைவில் தலிபான்கள் ஆட்சி.. "ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்" என பிரகடனப்படுத்த அறிவிப்பு!
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என விரைவில் அறிவிப்போம் என தலிபான்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
அமெரிக்காவை விட்டு அதன் படைகள் வெளியேற வேண்டும் என கடந்த ஆண்டு தோஹாவில் தலிபான்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள், தூதரக அதிகாரிகள் வெளியேறி வருகிறார்கள். இதனால் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. நிறைய அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
தலிபான்களுடனான ஒப்பந்தத்தின்படி இந்த மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தலிபான்களின் கை ஆப்கானிஸ்தானில் ஓங்கியுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள், முக்கிய மாகாண தலைநகரங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் வேகமாக கைப்பற்றின.

பாகிஸ்தான்
இந்த நிலையில் நேற்றைய தினம் காபூலை பாகிஸ்தானுடன் இணைக்கும் ஜலாலாபாத்தை கைப்பற்றிய தலிபான்கள் பிற்பகலுக்கு பின்னர் காபூல் நகருக்குள் நுழைந்தனர். இதையடுத்து அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கானியை பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.

ஆப்கன் அதிபர்
இதையடுத்து அவர் ராஜினாமா செய்ததை அடுத்து பாதுகாப்பாக அந்த நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றினர். அந்த நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்நாட்டு அமைச்சர் அலி அகமது ஜலாலி இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார் என தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள்
சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். ஆப்கன் படையுடன் எந்தவித சண்டையும் இன்றி காபூலை தலிபான்கள் எளிதாக கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் காபூலில் உள்ள தங்கள் நாட்டினரை உலக நாடுகள் பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறார்கள். உலக நாடுகளின் தூதரகங்களும் மூடப்பட்டன.

காபூல்
இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் 120-க்கும் மேற்பட்ட இந்தியர்களை காபூலிலிருந்து இன்று அழைத்து வந்தது. ஓரிரு நாட்களில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கையில் எடுப்பார்கள் என தெரிகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என பிரகடனப்படுத்துவோம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications