அமெரிக்கா விமானம் பாருடா.. ஊஞ்சல் கட்டி ஆடுடா.. தலிபான்களின் காமெடி அட்டகாசம்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தினர் விட்டுச் சென்ற பழைய விமானத்தில் இறக்கையின் விளிம்பில் கயிற்றை கட்டி ஊஞ்சல் விளையாடும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகள் கழித்து தலிபான்களின் ஆட்சி நடைபெறவுள்ளது. அங்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஆட்சியை தலிபான்கள் கலைக்க அச்சுறுத்தினர். இதையடுத்து அதிபராக இருந்த அஷ்ரப் கானியை நாட்டை விட்டே விரட்டினர்.
துப்பாக்கி முனையில் கலைக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கையில் எடுத்து ஆட்சியை பிடித்த நேரத்தில் நகைப்புக்குரிய செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

பொழுதுப்போக்கு பூங்கா
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஷேர்பெர்கானில் பேகாவில் உள்ள போக்தி பொழுதுப்போக்கு பூங்காவுக்குள் சென்றனர். அங்கு குழந்தைகள் விளையாடும் டேஷிங் கார்களை விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் ரங்க ராட்டினத்திலும் உள்ள குதிரை மீது அமர்ந்து சுற்றினர். இதையடுத்து அவர் ஜம்பிங் டிராம்புகளிலும் ஏறி நின்று குதித்து விளையாடினர்.

துள்ளி குதித்து ஆட்டம்
இதையடுத்து ஒரு உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்ற அவர்கள் துள்ளி குதித்து விளையாடினர். ஆட்சியை பிடித்துவிட்டோம், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பற்றி யோசிக்காமல் இவர்கள் விளையாடியது அதிர்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியது. இவ்வாறு ஆசையாக விளையாடிய பூங்காவையே கடைசியில் நெருப்பை வைத்து எரித்துவிட்டனர்.

உருவங்கள்
அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள், உருவங்கள் ஆகியவை ஹரியத் நடைமுறைக்கு எதிரானது என்பதால் அவர்கள் தீ வைத்து கொளுத்தியதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இவர்கள் ஆட்சி அமைக்க பிரதமரை தேர்வு செய்துவிட்டார்கள். அமைச்சரவை பட்டியலும் வெளியாகிவிட்டது.

20 ஆண்டுகள்
நேற்றைய தினம் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த விழா ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்கா விட்டு சென்ற விமானத்தின் இறக்கையில் கயிறு கட்டி ஊஞ்சல் விளையாடி வரும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரின்போது 20 ஆண்டுகளாக குவிக்கப்பட்டிருந்த அமெரிக்க படைகள் தோஹா ஒப்பந்தத்தை அடுத்து திரும்ப பெறப்பட்டன. இதையடுத்து அப்படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறிவிட்டன.

விளையாட்டு பொருள்
இந்த நிலையில் அவர்கள் விட்டுச் சென்ற விமானங்களைத்தான் இவர்கள் விளையாட்டு பொருட்களாக மாற்றி இதன் இறக்கையின் முனையில் கயிறு கட்டி ஊஞ்சல் விளையாடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து சீனா ட்விட்டரில் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா விட்டுச் சென்ற விமானங்களை தலிபான்கள் விளையாட்டு பொருளாக மாற்றி கயிறு கட்டி ஊஞ்சல் விளையாடி வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தலிபான்கள்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும் அங்கும் அமையும் புதிய அரசுக்கு சீனா ஒத்துழைப்பு கொடுப்பதாக அறிவித்தது. இதையடுத்து 31 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் நிதியுதவியாக வழங்குவதாக அறிவித்தது. அது போல் தலிபான்களும் சீனா எங்களுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றனர். தலிபான்கள் ஆட்சியில் பிரதமர், அமைச்சரவை பட்டியல் வெளியான அடுத்த நாளே சீனா கண்டனம் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications