கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்குமார்.. காயமின்றி தப்பினார்! வீடியோ
பிரெசெல்ஸ்: நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் விபத்தில் சிக்கியுள்ளார். பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்த நிலையில், இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அஜித்குமாருக்கு எந்தவித பெரிய காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. விடா முயற்சி படம் ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி இல்லதாதால், குட் பேட் அக்லி படத்துக்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். கடந்த வாரம் படம் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் படத்தை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

நடிகர் அஜித்குமார்
இரண்டு படங்களில் நடித்து முடித்த கையோடு நடிகர் அஜித் கார் ரேசில் ஈடுபட தொடங்கிவிட்டார். சிறு வயதில் இருந்தே ரேஸ் மீது பிரியம் கொண்ட அஜித்குமார் பைக் மற்றும் காரில் ரேஸ் செல்ல விருப்பப்படுவார். ஒவ்வொரு திரைப்படம் முடியும் போது ஒரு லாங் டிரைவ் பைக்கில் சென்று வருவார். அந்த வகையில் சமீப நாட்களாக அஜித்குமார் கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்பட சூட்டிங் முடிந்த கையோடு துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் டீம் பங்கேற்றது.
அஜித்குமார் ஏகே மோட்டார் ரேசிங் குழு என்ற அணியானது துபாய் மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளில் நடந்த 24 ஹெச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்றது. இந்த போட்டியின் போது அஜித்குமாரின் அணி டாப் 10க்குள் வெற்றி பெற்று இருந்தது. அப்போது இதற்கான பயிற்சியின் போது அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளாகி இருந்தது. எனினும் அஜித்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
BIG CRASH During the test day of the 12h Spa Porsche 992 CUP Driver Ok 🙏#AjithKumar #AjithKumarRacing #GoodBadUgly pic.twitter.com/0BmzhEuLx6
— Sandy🤎Fans (@Manikan03663721) April 19, 2025
மீண்டும் விபத்தில் சிக்கினார்
180 கிமீ வேகத்தில் அஜித்குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நொடிப்பொழுதில் தடுப்புச்சுவரில் மோதி சுழன்றடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்புறமும், பின்புறமும் பலத்த சேதமடைந்து இருந்தது. எனினும் பயிற்சியின் இது போன்ற விபத்துக்கள் சாதாரணம் தான் என்று அஜித்குமார் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அஜித்குமாரின் இந்த குழு வெளிநாடுகளில் பல்வேறு கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறது.
தல அஜீத்குமார் அவர்கள் கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கி நலமுடன் மீண்டு வந்தார் 🔥#Ajithkumar𓃵 #AjithKumar #AjithKumarRacing #GoodBadUgly pic.twitter.com/3RR4g5p8Up
— Aadhi Shiva (@aadhi_shiva1718) April 19, 2025
இந்த நிலையில் தான் மீண்டும் கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கியுள்ளார். பெல்ஜியத்தில் நடந்து வரும் ஐரோப்பிய கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் டீமும் பங்கேற்று உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித்குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வளைவில் திரும்ப முயன்றபோது நேராக தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
காரின் முன்பகுதி சேதமடைந்து இருந்தது. எனினும் அதற்கு பிறகு அஜித் குமார் சிரித்தபடியே நடந்து வரும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித்குமாருக்கு லேசாக காலில் அடிபட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. கார் ரேஸ் பயிற்சியின் போது அடிக்கடி விபத்துக்கள் நடப்பது சகஜம் தான் என்றாலும், அஜித்குமாரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications