தமிழர் கலையை.. தமிழர் மரபை மீட்டெடுப்போம்.. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா
தமிழர் கலையை போற்றிடுவோம்.. தமிழர் மரபை மீட்டெடுப்போம் என்று கருப்பொருள் கொண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பில் தமிழ் விழா நடைபெறுகிறது.
மினியாபொலிஸ்: வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சார்பில் இந்த ஆண்டு தமிழ் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழர் கலையைப் போற்றிடுவோம்.. தமிழர் மரபை மீட்டெடுப்போம் என்பதை கருப்பொருளாகக் கொண்டு இவ்விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் செயலாளர் இரமாமணி செயபாலன்,"அனைவருக்கும் பேரவையின் பொங்கல் திருநாள், தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். பூமிப்பந்தில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நமது தமிழ் மரபையும், பாரம்பரியத்தையும் ஏறுதழுவுதல் உள்பட கட்டிக் காப்பது தமிழராகிய நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.

அவ்வகையில் இவ்வாண்டு பேரவையின் தமிழ் விழா கருப்பொருள் "தமிழர் கலையைப் போற்றிடுவோம்.. தமிழர் மரபை மீட்டெடுப்போம்" என்பது சாலச்சிறந்த ஒன்றாகும் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் கலை, இலக்கியம் என பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.
இவ்வாண்டு பேரவையின் தமிழ் விழா மினியாபொலிஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது. ஜுன் மாதம் 30ம் தேதி தொடங்கி ஜுலை மாதம் 3ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவிற்கு அனைத்து தமிழ்சங்கத் தலைவர் மற்றும் செயலர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள இரமாமணி, இதர தமிழ்ச்சங்க உறுப்பினர் மற்றும் நண்பர்களிடம் இந்தத் விழா குறித்த தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications