அமெரிக்காவில் அதிவேகமாக வளரும் தமிழ்! ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்!
அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் தமிழ் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் தமிழ் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அதேசமயம் எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் தமிழ் வேகமாக வளர்ந்து வருகிறது.
அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே என்று அழைக்கப்படும் சர்வே கடந்த வருடம் டிசம்பரில் நடத்தப்பட்டது. தற்போது இதன் சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த முறை அங்கு மொழி சார்ந்த சர்வேக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள 30.5 கோடி மக்களில் மொத்தம் 21.8 சதவிகித மக்கள் ஆங்கிலம் அல்லாத மொழிகள் பேசுகிறார்கள். அதாவது சுமார் 6.5 கோடி மக்கள் பிரென்ச், ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் பேசுகிறார்கள்.

ஹிந்தியின் நிலை
இந்த 6.5 கோடி பேரில் 20.6 சதவிகிதம் மக்கள், அதாவது 8.63 லட்சம் பேர் ஹிந்தி பேசுகிறார்கள். இந்திய மொழிகளில் இந்திதான் அமெரிக்காவில் அதிகம் பேசப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக குஜராத்தி உள்ளது. அதன்படி 4.34 லட்சம் பேர் அமெரிக்காவில் குஜராத்தி பேசுகிறார்கள்.

தெலுங்கு சாதனை
தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை வேகவேகமாக அமெரிக்காவில் வளர்ந்து வருகிறது. அதன்படி அமெரிக்காவில் தற்போது 4.15 லட்சம் பேர் தெலுங்கு பேசுகிறார்கள். இது 84.5 சதவிகித வளர்ச்சி ஆகும். அமெரிக்காவில் வேகமாக வளரும் இந்திய மொழிகளில் தெலுங்குதான் முதலிடம் பிடித்து இருக்கிறது.

தமிழ் என்ன இடம்
இதில் தமிழ் பிடித்து இருக்கும் இடம்தான் வித்தியாசமானது. இந்தியாவில் இருந்து மட்டும் சென்று இருக்கும் தமிழர்களை கணக்கில் கொள்ளாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கையில் இருந்து அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களை கணக்கில் கொண்டால் தமிழ் மொழி மூன்றாம் இடம் பிடிக்கிறது. அதன்படி 4.20 லட்சம் மக்கள் அமெரிக்காவில் தமிழ் பேசுகிறார்கள்.

வளர்ச்சி
ஆனால் வளர்ச்சியின் அடிப்படையில் அமெரிக்காவில் தமிழும் தெலுங்கும்தான் வேகமாக வளர்ந்து வருகிறது. அங்கு தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் வளர்ந்து இருக்கிறது. தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை 84.5 சதவிகிதம் வளர்ந்து உள்ளது. ஹிந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை 45 சதவிகிதம் வளர்ந்து உள்ளது. குஜராத்தி பேசும் மக்களின் எண்ணிக்கை 22 சதவிகிதம் வளர்ந்து இருக்கிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications