இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம் விருது... மக்கள், பாஜகவிற்கு அர்ப்பணித்த தமிழிசை!

Subscribe to Oneindia Tamil

சிகாகோ : சிகாகோவின் குளோபல் கம்யூனிட்டி சார்பில் வழங்கப்பட்ட இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரத்திற்கான விருதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த விருதை தமிழக மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் அர்ப்பணிப்பதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்,மருத்துவ,சமூகசேவைகளில் சர்வதேச அளவில் சிறந்த செயல்பாடுடைய பெண் தலைவர் என்று சிகாகோ நகரில் செனட்டர் டேவிஸ் தலைமையில் நடைபெற்ற 8-வது ஆண்டு பன்னாட்டு கலாச்சார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம் சார்பில் 'இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்' என்ற விருதுக்கு தமிழிசை சவுந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tamilisai soundarrajan received award at Chicago and dedicated it to tamil people and BJP cadres

பெருமைக்குரிய இந்த விருது தனக்கு கிடைத்ததற்கு தமிழிசை நன்றி தெரிவித்திருந்தார். இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே பாஜகவுக்கு பெண் ஒருவர் தலைவராக இருக்கிறார். 1999ல் பாஜக உறுப்பினரான தமிழிசை 15 ஆண்டுகளில் தமிழக பாஜக தலைவரானார். இவரது பணியை பாராட்டி மேலும் 3 ஆண்டுகளுக்கு தலைவர் பதவியை பாஜக நீட்டித்து தந்தது.

தமிழகத்தில் பாஜகவை காலூன்றச் செய்யவும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான பாஜக பெறவும் தமிழிசை செயல்பட்டு வருகிறார். விமர்சனங்கள், அரசியல் அவதூறுகள், மிரட்டல்கள் அனைத்தையும் கடந்து பொதுப்பணியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரத்திற்கான விருதை அவர் இன்று வாங்கினார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை பதிவிட்டுள்ளதாவது, சிகாகோ நகரில் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் சார்பில் அமெரிக்க முதல் தமிழ்செனட்டர் ராஜா கிருஷ்ணமூர்த்தி "இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்" என்ற விருதை வழங்கினார். இவ்விருதை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் அர்பணிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+