Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸ்கர விடுங்க.. செக் குடியரசில் தமிழ்நாடுக்கு கவுரவம்! உலகின் பெஸ்ட் சுற்றுலாவுக்கான ‘பட்வா’ விருது

Subscribe to Oneindia Tamil

பிராக்: செக் குடியரசில் பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறைக்கும், இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான பட்வா சர்வதேச பயண விருது சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் 7.03.2023 முதல் 9.03.2023 வரை சர்வதேச சுற்றுலா சந்தை (INTERNATIONAL TRAVEL BOURSE-2023) நடைபெற்றது.

இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சுற்றுலா புக்

தமிழ்நாடு சுற்றுலா புக்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள், பார்வையாளர்களிடம் தமிழ்நாட்டின் சுற்றுலா சிறப்புகள் குறித்த புத்தகங்கள், மடிப்பேடுகளை வழங்கி தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொள்ள அழைப்பு விடுத்து கவனம் ஈர்த்தனர். இந்த நிகழ்ச்சியை ஒட்டி பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாட்டுக்கு விருது

தமிழ்நாட்டுக்கு விருது

இதில் பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறைக்கும், இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான பட்வா சர்வதேச பயண விருது மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

செக் குடியரசு அமைச்சருடன் சந்திப்பு

செக் குடியரசு அமைச்சருடன் சந்திப்பு

அதை தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் செக் குடியரசு நாட்டின் தலைநகரான பிராக்கில் செக் குடியரசின் மண்டல மேம்பாட்டு அமைச்சகத்தின் துணை அமைச்சர், திரு. ஜான் ஃப்ளூக்சா அவர்கள் தலைமையிலான குழுவினரை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து தெரிவித்தனர். அத்துடன், அவற்றை உள்ளூர் செய்தி நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் வெளியிடுவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

சுற்றுலா குறிப்பு

சுற்றுலா குறிப்பு

இந்நிகழ்வின்போது செக் குடியரசின் மண்டல மேம்பாட்டு அமைச்சகத்தின் துணை அமைச்சர், ஜான் ஃப்ளூக்சா அவர்கள் தலைமையிலான குழுவினருக்கு அமைச்சர் கா.ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் சுற்றுலா சிறப்புகள் குறித்த விவரங்களை வண்ண புனப்படங்களுடன் தெரிவிக்கும் புத்தகங்களை வழங்கினார்.

உரையாடல்

உரையாடல்

இந்த சந்திப்பின் போது செக் குடியரசின் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், தமிழ்நாட்டின் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் பயணத்திட்டங்கள், ஓட்டல், தமிழ்நாடு விடுதிகள் பயன்பாட்டில் வணிகரீதியாக இணைந்து செயல்படுதல், சுற்றுலா பயணிகளின் தேவைக்கேற்ப சுற்றுலா திட்டங்களை வகுப்பது, விழாக்கள் மற்றும் சுற்றுலா பொருட்காட்சிகளில் கலந்து கொள்வது குறித்தும் கலந்துரையாடினார்கள்.

பலர் பங்கேற்பு

பலர் பங்கேற்பு

இந்த நிகழ்வில் செக் தேசிய சுற்றுலா நிறுவனத்தின் சர்வதேச சந்தைப்படுத்தல் மற்றும் புதிய சந்தைகள் மேலாளர் மாரக் க்ரவ்டில், செக் குடியரசின் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பயண முகவர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் கட்ரினா சாலோப்கோவா, செக் டிராவல் ஏஜென்சிகள் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் வெபர், செக் குடியரசின் மண்டல மேம்பாட்டு அமைச்சகத்தின் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த ஹனா நெட்பால் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டின் பண்பாடு

தமிழ்நாட்டின் பண்பாடு

பின்னர் சுற்றுலாதுறை அதிகாரிகள் செக் குடியரசின் கலாச்சார அமைச்சகத்தின் நினைவுச்சின்ன பராமரிப்புத்துறை இயக்குநர் ஜிரி வாஜ்க்னர் அவர்கள் தலைமையிலான செக் குடியரசின் கலாச்சார அமைச்சக குழுவினரை சந்தித்து, தமிழ்நாட்டின் பண்பாடு, தொன்மை குறித்து தெரிவித்ததுடன், தமிழ்நாடு மற்றும் செக்குடியரசின் பல்கலைக்கழக கலைப்பிரிவுகளின் பயிற்றுநர்கள், மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நடத்துவது குறித்தும், பண்பாட்டு பரிமாற்றம் செய்து கொள்வது, பாரம்பரியமிக்க திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் கலந்துரையாடினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+