"கடைசி தமிழன் இருக்கும் வரை.." இலங்கை நாடாளுமன்றத்தை அதிர வைத்த அர்ச்சுனா.. ஆவேச பேச்சு
கொழும்பு: இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தாலும் கூட இன்னுமே அங்குள்ள தமிழர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தே வருகிறார்கள். இதற்கிடையே அங்குத் தமிழர்கள் படும் கஷ்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் ராமநாதன் அர்ச்சுனா பேசியுள்ளார். ஆளும் இலங்கை அரசை மிகக் கடுமையாக விமர்சித்த அவர் கடைசி தமிழன் இருக்கும் வரை மீண்டும் என்பிபி கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என ஆவேசமாகப் பேசினார்.
நமது அண்டை நாடான இலங்கையில் வாழும் தமிழர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். உள்நாட்டுப் போர் முடிந்தாலும் கூட இன்னுமே அவர்களின் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. விலைவாசி உயர்வு, பொருளாதார பாதிப்பால் இலங்கை தடுமாறும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் கூடுதல் இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

ராமநாதன் அர்ச்சுனா
இதற்கிடையே அங்குத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா ஆவேசமாகப் பேசியுள்ளார். அங்கு ஆளும் அரசு எப்படி அடிப்படை வாத கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது என்பது குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. முஸ்லீம் சமூகத்தினரையும் இலங்கை அரசு ஒடுக்குவதாகச் சொன்ன அவர், அதை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.
பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்தீர்கள்
இது தொடர்பாக அவர் பேசுகையில், "தமிழ் மக்களிடம் பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்கள் தான் இந்த அநுரகுமார அரசு. எங்கள் மக்களும் இவர்கள் சொல்லும் பொய்களை உண்மை என்று நம்பி ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் இன்று நடப்பதைப் பார்த்தால் ஏற்க முடியவில்லை.. எங்களுடைய சமூகம் செய்த வரலாற்றுத் தவறு இந்த என்பிபி அரசுக்கு வாக்களித்தது தான். உங்களுக்குப் போடப்பட்ட ஒவ்வொரு வாக்கையும் நினைத்தால் எனக்கு நெஞ்செல்லாம் எரிகிறது.
ஈஸ்டர் அட்டாக்கை தொடர்ந்து முஸ்லீம் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு என் தனி ஒரு கலாச்சாரம் இருக்கிறது பிழையா? அவர்களுக்கு என்று ஒரு வரலாறு ஒன்று இருக்கிறது பிழையா? காலம் காலமாகத் தமிழனையும் முஸ்லிமையும் நீங்க என்ன செய்கிறீர்கள்.. போட்டு அடி அடி என்று அடிக்கிறீர்கள்.
பிள்ளையார் சிலை
திருக்கோணமலையில் போய் புத்தர் விகாரத்தை வைக்கிறீர்கள்.. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்.. இல்ல தெரியாமல் தான் கேட்கிறேன்.. இங்கு நான் பிள்ளையார் சிலையை வைத்தால் என்ன செய்வீர்கள். சும்மா இருப்பீர்களா? என்னை அடித்துக் கொல்வீர்கள். ஏனென்றால் உங்கள் மனசில் வெறி இருக்கிறது.. இன வெறி இருக்கிறது.
கடைசி தமிழன் இருக்கும் வரை
நாளை இந்த நாடாளுமன்றம் முன்பு, நான் புத்தர் சிலையை எடுத்துவிட்டு ஒரு பிள்ளையார் சிலையை வைக்கிறேன். நீங்கள் வைக்க விடுவீர்களா? திரும்பத் தீரும் அடிப்பீர்கள். நாங்களும் பார்க்கிறோம். பொறுத்துப் பொறுத்து பார்க்கிறோம். ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்கிறேன்.. கடைசி தமிழன் இருக்கும் வரைக்கும் வடக்கு மாகாணத்தில் ஒரு ஓட்டும் உங்களுக்கு விழாது. உங்களைப் பார்த்தாலே வெட்கமாக இருக்கிறது. நான் தமிழ் பால் குடித்து வளர்ந்தவன்.. ஆனால் முஸ்லிம் என்னுடைய ரத்தம்.. நீங்கள் என்ன சொன்னாலும்.. என்ன செய்தாலும் ஒவ்வொரு முஸ்லீம் மக்களுக்காகவும் நான் நிற்பேன்" என்றார்.
அவரது இந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. அடிப்படையில் ஒரு மருத்துவரான ராமநாதன் அர்ச்சுனா, இலங்கையில் நடந்த ஒரு சுகாதார முறைகேட்டை அம்பலப்படுத்தியதன் மூலம் கவனம் பெற்றவர். அதன் பிறகு அரசியலில் குதித்த அவர், 2024ல் இலங்கை எம்பியாக தேர்வானார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications