விளையாட்டு வினையானது.. நண்பன் பலி.. போலீஸ் பயத்தில் சிறுவனும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
நண்பனைக் கொன்றதற்காக போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் அமெரிக்கச் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
வாஷிங்டன் : அமெரிக்காவில் நண்பனை தவறுதலாக சுட்டுக் கொன்ற மாணவர், போலீசுக்கு பயந்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவின் புறநகர் பகுதி லாரன்சஸ்வில்லே. இங்கு வசித்து வந்த டெவின் ஹோட்ஜ் என்ற 15 வயது சிறுவனைச் சந்திக்க, புத்தாண்டு தினத்தன்று அவனது நண்பர்கள் மூன்று பேர் வந்திருந்தனர். நண்பர்களிடம் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியைக் காட்டியுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியின் விசையை அழுத்தி விட்டான் டெவின்.

இதில் அவனது அருகில் அமர்ந்திருந்த சாத் கார்லெஸ் என்ற 17 வயது சிறுவனின் மீது குண்டு பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதைப் பார்த்து மற்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து ஓடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இப்படி ஒரு அசம்பாவிதம் நடைபெறும் என கொஞ்சமும் எதிர்பாராத டெவின், போலீஸ் வருவதைப் பார்த்து அஞ்சியுள்ளான். அவர்கள் வந்து தன்னை கைது செய்து தூக்கில் போட்டு விடுவார்கள் என எண்ணி, தன்னைத் தானே சுட்டு அவன் தற்கொலை செய்து கொண்டான்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications