குழந்தையை பெற்று, கொன்று, கைப்பையில் போட்டு ஷாப்பிங் சென்ற 16 வயது சிறுமி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் பெற்ற ஆண் குழந்தையை கொன்று ஒரு பையில் போட்டுக் கொண்டு ஷாப்பிங் சென்ற சிறுமி தன் மீதான கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினைச் சேர்ந்தவர் டியோனா ரோட்ரிகஸ்(18). குடும்பத்தாருக்கு தெரியாமல் 14 வயதில் தாயாகியுள்ளார். அதன் பிறகு மீண்டும் ஒரு குழந்தையை பெற்றுள்ளார். அந்த குழந்தை மாயமாகியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக குடும்பத்தாருக்கு தெரியாமல் கர்ப்பமான டியோனா கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி நியூயார்க்கில் உள்ள க்வீன்ஸில் வசிக்கும் தனது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார்.

Teenage mother kills newborn baby, then goes shopping with dead body

அங்குள்ள கழிவறையில் 3.6 கிலோ எடையுள்ள ஆண் குழந்தையை பெற்றுள்ளார். பெற்ற கையோடு குழந்தையை கொன்று தனது கைப்பையில் போட்டுள்ளார். அதன் பிறகு மான்ஹாட்டன் பகுதியில் ஷாப்பிங் செய்துள்ளார். கடையில் அவர் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடை பாதுகாவலர் டியோனாவின் கைப்பையை சோதனை செய்தபோது அவர் திருடிய பேண்ட் மற்றும் குழந்தையின் உடல் இருந்தது.

இதையடுத்து டியோனா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் கடந்த விழாக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எர்ல் வார்ட் கூறுகையில், டியோனா தனது குழந்தையை கொலை செய்யவில்லை. அது இறந்தே பிறந்தது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டியோனாவை ஜாமீனில் வெளியே விடக் கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். டியோனாவோ தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+