அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன்
தெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா போரால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானும் கடுமையாக பதிலடி கொடுத்துவருவதால் போர் இப்போதைக்கு முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அமெரிக்கா 48 மணி நேரம் போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகவும் ஆனால், அதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் - அமெரிக்கா இடையே நடைபெறும் போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. ஈரானை கற்காலத்திற்கே அனுப்புவோம் என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவித்த அமெரிக்கா அதிபர் டிரம்ப் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார். இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

சுட்டு வீழ்த்திய ஈரான்
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் அங்குள்ள முக்கிய உள்கட்டமைப்புகளையும் தாக்கி வருகிறது. ஈரானில் உள்ள மிகப்பெரிய பாலத்தை அமெரிக்கா நேற்று தாக்கி அழித்தது. இதனால், கோபத்தின் உச்சிக்கே போன ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள 8 பாலங்களை தாக்கி அழிக்க போவதாக பட்டியலையும் வெளியிட்டது.
ஈரான் வளைகுடா நாடுகளை நோக்கி வீசும் நூற்றுக்கணக்கான டிரோன்கள், ஏவுகணைகளை இடை மறித்து அழித்ததாக மத்திய கிழக்கு நாடுகள் கூறியுள்ளன. இதற்கிடையே அமெரிக்காவின் அதி நவீன போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. அந்த விமானத்தில் இருந்த ஒரு பயணியையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திட்டவட்டமாக மறுத்த ஈரான்
ஈரானும் விமானியை பிடிக்க முழு வீச்சில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரினால் இதுவரை ஈரானில் 3,500 பேரும், இஸ்ரேலில் 19 பேரும் 13 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரானுடன் 48 மணி நேர போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்கா மூன்றாம் தரப்பு நாடு மூலமாக கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அமெரிக்காவின் இந்த 48 மணி நேர போர் நிறுத்த முன்மொழிவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் தெஹ்ரானின் நிலைப்பாடு மேலும் கடுமையாகி வருவதை வெளிப்படுத்தும் விதமாக ஈரானின் இந்த முடிவு அமைந்துள்ளது. ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக முயற்சிகள் தோல்வியடைந்ததுடன், ராணுவ மோதல்களும் தீவிரமாக அதிகரித்துள்ளன.
அமெரிக்காவுக்கு பின்னடைவு?
ஈரான் போரை இரண்டு வாரத்திற்குள் முடித்துவிடுவோம் அந்த நாட்டின் உள்கட்டமைப்புகள் அனைத்தும் தகர்க்கப்படும் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், தற்போது ஈரானும் மூர்க்கத்தனமாக அடிப்பதால் கடும் நெருக்கடியை அந்த நாடு சந்தித்து வருகிறது. கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று கூறிவிட்டு போர் நிறுத்தத்தை முன்மொழிந்து அதனை ஈரான் நிராகரித்து இருப்பதால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுவதாக சர்வதேச நோக்கர்கள் கூறியுள்ளனர்.
எனினும், போர் நிறுத்தம் செய்யக்கோரி முன்மொழிவு வைக்கப்பட்டதாகவோ, அதை ஈரான் நிராகரித்தது தொடர்பாகவோ இதுவரை அமெரிக்கா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
-
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
லீக்கான அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்.. அட இதெல்லாம் இருக்கா.. ஈரானுக்கு இனி ராஜவாழ்க்கை! -
ராஜா மாதிரி மீண்டும் தலையெடுக்கும் ஈரான்.. ஹார்மூஸ் வழியாக 3 ஈரானிய கப்பல் 'அவுட்'! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
இஸ்ரேல் தேரை இழுத்து தெருவில் விட்டது.. லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்! -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்!












Click it and Unblock the Notifications