பாக். தியேட்டடில் குண்டுவெடிப்பு: ‘பலான’ படம் பார்க்க வந்த 10 பேர் பரிதாபப் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில் ஆபாச படம் திரையிடும் சினிமா தியேட்டரில் குண்டு வெடித்ததில், தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ளது ஷமா என்ற சினிமா தியேட்டர். இத்தியேட்டரில் அடிக்கடி ஆபாச படங்கள் திரையிடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று ஷமா தியேட்டர் மீது தீவிரவாதி ஒருவன் இரண்டு கையெறி குண்டுகளை வீசியுள்ளான். இதில், அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயம் அடைந்தனர்.
குண்டுவெடித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
கையெறி குண்டை வீசிய நபரைப் போலீசார் தேடி வருகின்றனர். இதற்கு முன்னரும் இப்பகுதியில் உள்ள தியேட்டர்களைக் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications