தோழி கல்யாணத்திற்கு 'கவர்ச்சி சிறுத்தை'யாக போய் வாழ்த்திய செரீனா வில்லியம்ஸ்!
மியாமி: தனது தோழியின் திருமணத்திற்கு நீச்சல் உடையில் சென்று வாழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.
வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய நிகழ்வு திருமண விழா. மணமக்களை வாழ்த்த செல்லும் உறவினர்கள், நண்பர்கள் பெரும்பாலும் அப்பகுதியின் பாரம்பரிய உடைகளை அணிந்து செல்வது வழக்கம்.
ஆனால், பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், நீச்சல் உடையோடு திருமணத்தில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தியதால், அவ்விழாவிற்கு வந்திருந்த மற்றவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

காதல் திருமணம்...
பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியசின் தோழி கரோலின் வோஷினியாகி. கடந்த 3 வருடங்களாக பிரபல கோல்ப் வீரர் ரோரி மொக்லேரியைக் காதலித்து வந்த கரோலின், சமீபத்தில் மியாமி கடற்கரையில் காதலரை கரம் பிடித்தார்.

தோழியின் திருமணம்..
வெகு விமர்சையாக நடந்த இத்திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். மணமகளின் நெருங்கிய தோழியான செரீனாவும் விழாவில் கலந்து கொண்டார்.

நீச்சலுடையில்...
ஆனால், மண விழாவிற்கு வந்திருந்த பெரும்பாலானோர் கவனம் செரீனா மீது தான் இருந்தது. காரணம் அவர் பிரபல டென்னிஸ் வீரர் என்பதால் மட்டுமல்ல, அவரது உடையும் தான். ஏனென்றால் தோழியின் திருமணத்திற்கு செரீனா நீச்சலுடையில் வந்திருந்தார்.

திருமணப்பரிசு...
படுகவர்ச்சியான சிறுத்தையின் தோல் போல் புள்ளிகள் போட்ட நீச்சலுடை அணிந்திருந்திருந்த செரீனா, தனது தோழியை வாழ்த்தியதோடு விலையுயர்ந்த பரிசையும் கொடுத்தார்.

போட்டோவுக்கு போஸ்...
செரீனாவின் உடை மற்றவர்களைத் தான் அதிர்ச்சியடையச் செய்தது. ஆனால், அது எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் நீச்சலுடையிலேயே போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தார் செரீனா.

ஜாலியா ஒரு குளியல்...
தோழியின் திருமணத்தில் கலந்துகொண்டவுடன் அப்படியே அருகில் உள்ள கடலில் சென்று குளிக்க சென்று விட்ட செரீனாவை போட்டோகிராபர்களும் வீடியோ எடுப்பவர்களும் விரட்டி விரட்டி படம் பிடித்தனர்.

இணையத்தில்...
தான் நீச்சல் உடையில் தோழிக்கு வாழ்த்து சொல்லிய படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார் செரீனா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications