For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை வீரர் பலி

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் கடற்படை வீரர்கள்- வீடியோ

    பாங்காக்: தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை முக்குளிப்பவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாய்லாந்தில் 12 பள்ளி மாணவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் மாயமாகினர். சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட தேடுதலில் அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

    Thai boys rescue: Former Navy diver dies

    அவர்கள் மாயமாகி 9 நாட்கள் கழித்து தான் அவர்களை பற்றிய தகவல் கிடைத்தது. அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போதிலும் அவர்களை அங்கிருந்து மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறுவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படையினர், முன்னாள் கடற்படை முக்குளிப்பவர்கள், சர்வதேச நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை முக்குளிப்பவர்(டைவர்) குகையில் போதிய காற்று இல்லாததால் மூச்சு திணறி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கால்பந்து பயிற்சிக்காக கடந்த மாதம் 23ம் தேதி வெளியே சென்ற சிறுவர்கள் வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A former Thai Navy diver who was involved in the rescue operation of 12 boys and their soccer coach from a cave in Thailand has died.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X