ஊரு விட்டு ஊரு வந்து.. வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இப்ப உதடு போச்சா!
பட்டாயா, தாய்லாந்து: தாய்லாந்து நாட்டில் பெண்ணிடம் சேட்டை செய்து அத்துமீறியுள்ளார் இந்தியர் ஒருவர். இதனால் கோபமடைந்த அந்தப் பெண், இந்தியரின் உதட்டை பலமாக கடித்துத் துப்பி விட்டார். தற்காப்புக்காக இவ்வாறு செய்ததாக அப்பெண் போலீஸில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் சஷாங்க் அகர்வால். 30 வயதான இவர் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணியாக வந்துள்ளார். வந்த இடத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் சேட்டை செய்து தற்போது உதட்டை இழந்துள்ளார்.
பட்டாயாவுக்கு வந்த அகர்வால், அங்கு சாலையோரமாக நடந்து போயுள்ளார். அப்போது வழியில் சுகன்யா பபீக் (38) என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

ரோட்டில் வைத்து சண்டை
இவர் தாய்லாந்துக்காரர். அகர்வாலிடம் இயல்பாக பேசியுள்ளார் சுகன்யா. இருவரும் பேசிக் கொண்டே நடந்து சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ரோட்டில் வைத்தே இருவருக்கும் கடும் சண்டை மூண்டுள்ளது.

கட்டிப்புரண்டு சண்டை
கோபாவேசமாக சுகன்யா, அகர்வாலை கீழே தள்ளி விட்டு அடிக்க ஆரம்பித்தார். அவரது உதட்டையும் பலமாக கடித்தார். ஆவேசக் கூச்சலிட்டபடி அவர் சண்டை போட்டதால் அந்த பகுதியே பரபரப்பானது. கடுமையாக போராடி சுகன்யாவை விலக்கி விட்டனர். அப்படியும் ஆத்திரம் தீராமல் அகர்வாலை துரத்தினார் சுகன்யா

உதடு போச்சு
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், சுகன்யாவை தடுத்து நிறுத்தினர். உடனடியாக அகர்வாலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். போலீஸார் சுகன்யாவைக் கைது செய்தனர்.

ஏன் கடித்தார் சுகன்யா
அவரிடம் நடத்திய விசாரணையின்போது என்னை பலாத்காரம் செய்ய அவர் முயன்றதால் தற்காப்புக்காக நான் இதுபோல நடக்க நேரிட்டதாக சுகன்யா தெரிவித்துள்ளார். இன்னும் அகர்வாலிடம் போலீஸார் விசாரணை நடத்தவில்லை. விசாரணைக்குப் பின்னரே அவர் மீது வழக்கு பாயுமா என்ற விவரம் தெரிய வரும்.
வெளிநாட்டுக்கெல்லாம் போனா வாயை வச்சுட்டு சும்மா இருங்கப்பா.. இல்லாட்டி இப்படித்தான்!
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications