தாய்லாந்தில் ராணுவ ஆட்சி அறிவிப்பு.. கம்போடியா மோதலில் உள்ளே இறங்கும் ராணுவம்! என்ன நடக்கிறது?
பாங்காக்: தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே எல்லைப் பகுதியில் நடந்த மோதல் தீவிரமடைந்து இருக்கிறது. இதனால் எல்லைப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தாய்லாந்து ஆரம்பித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாவது நாளாக எல்லையில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், எல்லைப் பகுதியில் ராணுவ நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உலகில் புவிசார் அரசியல் சூழல் மோசமாகிக் கொண்டே போகிறது. உலகில் பல நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. மோதலும் போரும் ஏற்படும் சூழல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் தான் மத்தியக் கிழக்கில் வெடித்த மோதல் முடிவுக்கு வந்திருந்தது. இதற்கிடையே இப்போது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்து கம்போடியா நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

தாய்லாந்து
இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 1.3 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் போராக மாறும் அபாயம் இருப்பதாக தாய்லாந்தின் இடைக்காலப் பிரதமர் ஃபும்தம் வெச்சயாச்சாய் எச்சரித்துள்ளார். இரு நாடுகளும் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
எல்லை விவகாரம் காரணமாகவே இரு நாடுகளும் மோதலில் இறங்கியுள்ளன. ஜெட் விமானங்கள், பீரங்கிகள், டாங்கிகள் என ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
ராணுவ ஆட்சி
இதற்கிடையே தாய்லாந்து ராணுவ எல்லைப் பாதுகாப்புப் படை இன்று மாலை கம்போடியாவுடனான எல்லையில் இருக்கும் எட்டு மாவட்டங்களில் ராணுவ ஆட்சி அல்லது ராணுவ நிலையைப் பிரகடனப்படுத்தி உத்தரவிட்டுள்ளது. கம்போடியா ராணுவம் தாய்லாந்து எல்லைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவின் ஒட்டர் மீஞ்சே மாகாணத்தில் இருந்து பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. இந்த தாக்குதலில் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
1.3 லட்சம் பேர் வெளியேற்றம்
இரு தரப்பு மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், தாய்லாந்தின் எல்லைப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 1.3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த மோதலில் இதுவரை 14 பொதுமக்கள் மற்றும் ஒரு ராணுவ வீரர் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 ராணுவ வீரர்கள் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தாய்லாந்து இடைக்காலப் பிரதமர் ஃபும்தம், "அண்டை நாடுகள் என்பதால் விட்டுக்கொடுத்துப் போக முயற்சி செய்தோம்.. ஆனால் நிலைமை கைமீறிவிட்டது. இதனால் அவசர நிலையைச் செயல்படுத்தி உள்ளோம். நிலைமை மோசமானால், அது போராகவும் மாறக்கூடும். இப்போது வரை இது மோதலாக மட்டுமே உள்ளது" என்று குறிப்பிட்டார்.
தாய்லாந்து கம்போடியா விவகாரம்- பின்னணி
தாய்லாந்து, கம்போடியா இடையிலான இந்த விவகாரம் 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது. பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்து கம்போடியா விடுதலை பெற்ற போது, இரு நாடுகள் இடையே எல்லை விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது முதலே இரு தரப்பிற்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இருப்பினும், 2008ல் தான் இது தீவிரமடைந்தது.
இரு நாடுகளும் உரிமை கொண்டாடும் சர்ச்சைக்குரிய பகுதியில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இருக்கிறது. அதை யுனெஸ்கோ பாரம்பரியத் தலமாகப் பதிவு செய்ய கம்போடியா முயன்ற போதே 2008ல் மோதல் வெடித்தது. தொடர்ச்சியாக இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்த இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள், பொது மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த மே மாதம் நடந்த மோதலில் கம்போடிய வீரர் உயிரிழந்தார். அதன் பிறகு அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் நிலைமை மோசமாகிப் போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications