குகையை உடைத்திருப்போம்.. கடற்படை வீரனாவேன்.. தாய்லாந்து சிறுவர்களின் அசர வைக்கும் பதில்கள்
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது நிருபர்களுக்கு பொது நிகழ்ச்சியில் பேட்டி அளித்து இருக்கிறார்கள்.
Recommended Video

பாங்காக்: செய்தியாளர்கள் சந்திப்பில் தாய்லாந்து சிறுவர்கள் அளித்த பதில்கள் மக்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது.
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது நிருபர்களுக்கு பொது நிகழ்ச்சியில் பேட்டி அளித்து இருக்கிறார்கள்.தி தம் லுஅங் எனப்படும் தாய்லாந்தில் இருக்கும் குகைகுள் இரண்டு வாரம் முன் பள்ளி சிறுவர்கள் சிக்கினார்கள்.
இந்த குறுகலான குகைக்குள் 2 வாரம் முன்பு தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது.தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் எல்லோரும் முதல்முறையாக, தொலைக்காட்சி முன்னிலையில் தோன்றி பேட்டி அளித்து இருக்கிறார்கள்.

மன்னிப்பு கேட்டனர்
இந்த நிலையில் இந்த பேட்டியில் எல்லா சிறுவர்களும் ஒன்றாக சேர்ந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டார்கள். மிகவும் தவறான முடிவை தாங்கள் எடுத்துவிட்டோம். எங்களுக்கு அங்கே இவ்வளவு பாதிப்பு இருக்கும் என்று தெரியாது. எங்கள் பெற்றோரிடம் நாங்கள் அங்கு செல்வது குறித்து தெரிவிக்கவில்லை. நாங்கள் கால்பந்து பயிற்சி மேற்கொள்ள செல்கிறோம் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள், என்றனர்.

முதலில் வெளியேறுவது
யார் முதலில் வெளியேறுவது குறித்த கேள்விக்கு, யார் முதலில் வெளியேறுவது என்று நாங்கள் முடிவு செய்யவில்லை. அந்த விஷயத்தில் எங்களுக்குள் போட்டியே இல்லை. இதை நாங்கள் மீட்பு பணியிடம் விட்டுவிடலாம் என்று நினைத்தோம். அவர்கள்தான் யார் வெளியேற வேண்டும் என்று கூறினார்கள் என்றனர்.

மீண்டும் குகைக்கு
மீண்டும் குகைக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு , சிலர் கண்டிப்பாக செல்ல ஆசை இருக்கிறது. ஆனால் இந்த முறை நல்ல பாதுகாக்கப்புடன் செல்ல வேண்டும். சிலர் எங்களுக்கு இனி அந்த குகையே வேண்டாம். இப்போதும் கூட அந்த பயம் எங்களுக்கு ;போகவில்லை என்று பேட்டியளித்துள்ளனர்.

என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
எதிர்காலத்தில் என்ன ஆகவேண்டும் ஆகவேண்டும் வேண்டும் என்ற கேள்விக்கு பெரும்பாலான சிறுவர்கள், கால்பந்து வீரர்கள் ஆக வேண்டும் என்ற . ஒரே ஒரு சிறுவன் மட்டும் தாய்லாந்து கடற்படை வீரன் ஆகவேண்டும் என்றான். அவர்கள்தான் இந்த மீட்பு பணியை முன்னின்று நடத்தியது. இந்த பதிலுக்கு எல்லோரு கரகோஷம் எழுப்பினார்கள்.

என்ன நடந்து இருக்கும்
முக்கியமாக இவர்கள் அளித்த பேட்டியில், உங்களை யாரும் காப்பாற்ற வரவில்லை என்றால் என்ன செய்து இருப்பீர்கள் என்ற கேள்விக்கு, நாங்கள் குகையை உடைக்க திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். எங்களை யாரும் காப்பாற்ற வரவில்லை என்றால், நாங்கள் குகை உடைத்துக் கொண்டு வெளியே சென்று இருப்போம் என்றனர். இந்த பதிலுக்கு பெரிய அளவில் கரகோஷம் கிடைத்தது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications