Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்தோசத்தில் குதிக்கும் மக்கள்.. தாய்லாந்து சிறுவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்?

தாய்லாந்து குகைக்குள் மாட்டி இரண்டு வாரத்திற்கு பின் மீட்கப்பட்ட 13 பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிறுவர்கள் மீட்கப்பட்டதை விழா போல கொண்டாடும் தாய்லாந்து மக்கள்- வீடியோ

    பாங்காக்: தாய்லாந்து குகைக்குள் மாட்டி இரண்டு வாரத்திற்கு பின் மீட்கப்பட்ட 13 பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை தேறிவருவதாக கூறப்படுகிறது.

    தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள்.விளையாட்டு சுற்றுலா சென்ற இந்த 13 பேரும் கடந்த 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர்.

    சென்ற வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. பல போராட்டத்திற்கு பின் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். மூன்றுநாள் மீட்பு பணியின் முடிவாக, நேற்று மாலை எல்லோரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

    கொண்டாட்டம்

    கொண்டாட்டம்

    இவர்கள் வெற்றிகரமாக மீட்கபட்டதை அந்த பகுதி மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்நாட்டின் தலைப்பு செய்தி தொடங்கி ரேடியோ வரை இந்த மாணவர்களின் பெயர்களும், வெற்றியும்தான் பேசப்பட்டு வருகிறது. தாய்லாந்து மக்கள் எல்லோரும், ஒன்றாக சேர்ந்து பண்டிகை ஒன்றை கொண்டாடுவது போல கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

    நிமோனியா, வெள்ளை அணுக்கள்

    நிமோனியா, வெள்ளை அணுக்கள்

    இதில் சில சிறுவர்களுக்கு தற்போது நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. அதிக நேரம் நீர் இருக்கும் பகுதியில் இருந்த காரணத்தால் அவர்களுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் சிலருக்கு வெள்ளை அணுக்கள் அதிக அளவில் குறைந்து இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. சிகிச்சை தொடர்ந்து நடந்து வருகிறது.

    நன்றாக பேசுகிறார்கள்

    நன்றாக பேசுகிறார்கள்

    ஆனாலும் இவர்கள் எல்லோரும் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக தாய்லாந்து மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகள் எல்லாம் சிறிய சிறிய பாதிப்புதான், ஆட்கள் ஒல்லியாக இருந்தாலும் அவர்களுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அவர்கள் கால்பந்தாட்ட வீரர்கள் என்பதால் அவர்களுக்கு அதிக எதிர்ப்பு சக்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    பணியாளர்களுக்கு உதவி

    பணியாளர்களுக்கு உதவி

    அதுமட்டும் இல்லாமல் அங்கு வேலை பார்த்த சில மீட்பு பணியாளர்களுக்கும் உடலில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. சரியாக உணவு, சரியான தூக்கம் இல்லாமல் எல்லோரும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாகா உடல் நலிவு அடைந்த நபர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+