ஜாலியா டேட்டிங் போலாம்.. சம்பளத்தோட விடுமுறை அளிக்கும் நிறுவனம்.. எங்குள்ளது தெரியுமா?
தாய்லாந்து: காதலில் இருந்தால்தான் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பாங்க.. ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நிறுவனத்தின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக சம்பளத்துடன் கூடிய டிண்டர் லீவு அளிக்கும் நிறுவனம் குறித்து தெரிந்து கொள்ளலாம்..
சிக் லீவு என்றாலும் ஒரு வாரத்துக்கு முன்னாடி மெயில் போடனும்னு தெரியாதா என்று இந்திய நிறுவன மேலாளர் ஒருவர் கூறியது அண்மையில் சோஷியல் மீடியாக்களில் செம வைரலாகியது. அது எப்படிங்க ஐயா உடம்பு சரியில்லைங்கிறத ஒரு வாரத்துக்கு முன்னாடி தெரியும், பேசாம ஒவ்வொரு வாரத்துக்கும் ஒரு சிக் லீவு மெயிலை போட்டுட்டு, தேவைப்பட்டால் விடுமுறை எடுத்துக்கணும். இல்லாட்டி உடம்பு சரியாகிடுச்சுன்னு அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டியதுதான் போன்ற கமெண்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.

விடுமுறை கேட்பதற்காக போராடும் ஒவ்வொரு ஊழியரும் டிசைன் டிசைனான ஐடியாக்களோடு அலுவலகத்துக்கு வந்து மேலாளரிடம் லீவு கேட்டு அதனை ஓகே செய்வது என்பது கிட்டத்தட்ட போரில் வெற்றி பெறுவது போலத்தான். பெரும்பாலான ஊழியர்களின் நிலைமை இப்படியிருக்க தாய்லாந்தில் உள்ள ஒரு நிறுவனம் டேட்டிங் போவதற்கு சம்பளத்தோடு டிண்டர் லீவு எனும் விடுமுறையை தங்களது ஊழியர்களுக்கு அளிப்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதுவும் அந்த நிறுவனம் விடுமுறை அளிப்பதற்கான கூறிய காரணம்தான் ஹைலைட். தங்களது ஊழியர்கள் காதலில் இருப்பது அவர்களது மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது நிறுவனத்தின் உற்பத்தியை கூடுதலாக அதிகரிக்க உதவும் என்பதால் இந்த விடுமுறையை அமல்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. வாங்க அந்த அதிசய நிறுவனம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தாய்லாந்தில் உள்ள மார்க்கெட்டிங்கள் நிறுவனம்தான் தங்களது ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்கு காசும் கொடுத்து, லீவும் கொடுக்கிறது. தாய்லாந்தில் உள்ளது வைட்லைன் குரூப் எனும் மார்க்கெட்டிங் நிறுவனம். இந்த நிறுவனம்தான் டிண்டர் லீவ் எனும் இந்த முறையை கொண்டு வந்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் டேட்டிங் கூட செல்ல முடியாத அளவுக்கு வேலையில் பிஸியாக இருப்பதாக நேரடியாக நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, வைட்லைன் குரூப் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் லிங்க்ட்இன் இல் வெளியிட்டுள்ள பதிவில், எங்களது நிறுவன ஊழியர்கள் டேட்டிங் செய்வதற்கு டிண்டர் விடுமுறையைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், நிறுவனத்தில் பணியாற்றும் ஊளியர்கள் காதலில் இருப்பது அவர்களுடைய மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர்களது மகிழ்ச்சி அந்த நிறுவனத்தின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க உதவும் என்று எங்களது நிறுவனம் நம்புகிறது. டிண்டர் லீவு எடுத்து டேட்டிங் செல்லும் ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு முன்பு நோட்டீஸ் மூலம் அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிண்டர் லீவ் எத்தனை நாள்கள் அளிக்கப்படுகிறது என்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. லீவு மட்டுமில்லாமல் தங்கள் ஊழியர்களுக்கு டிண்டர் பிளாட்டினம், டிண்டர் கோல்ட் ஆகியவற்றின் ஆறு மாத சந்தாவை நிறுவனமே செலுத்துகிறது. இந்த சலுகை எல்லாம் இந்த ஆண்டு ஜூலை 9 முதல் டிசம்பர் 31 தேதிகளுக்குள் பணியில் சேரும் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications