முன்னாள் காதலன் உள்பட 12 பேருக்கு சயனைடு கொடுத்து கொன்றாரா கர்ப்பிணி? தாய்லாந்தில் நடந்தது என்ன?
பாங்காங்: தாய்லாந்து நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 12 நண்பர்களுக்கு சயனைடு கொடுத்து கர்ப்பிணி ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங் நகரை சேர்ந்தவர் சாராரத்சிங் சிவுதாபார்ன் (32). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சிரிபோர்ன் என்ற தோழியுடன் ரட்சாபுரி மாகாணத்திற்கு சுற்றுலா சென்றார். அங்கு புத்த வழிபாடு நடத்த அப்பகுதியில் உள்ள ஆற்றுக்கு இருவரும் சென்றனர்.
அப்போது சிரிபோர்ன் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். அவரது மொபைல் போன், பணம், பர்ஸ் ஆகியவை காணாமல் போனது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய பாங்காங் போலீஸார் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது அவர் சாப்பிட்ட உணவில் சயனைடு எனும் கொடிய விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக சிரிபோர்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் சாராரத் சிங் சிவுதாபார்னிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக் தகவல்கள் கிடைத்தன.
சாராரத் சிங் தனது முன்னாள் காலதன் உள்பட 12 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலைகளை கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அவர் செய்திருந்ததும் தெரியவந்தது. கொலையானவர்கள் அனைவரும் 33 வயது முதல் 44 வயதை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.
இவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடுவதற்காக இந்த கொலைகளை செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் சாராரத் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் முன்னாள் மனைவி என்பது தெரியவந்தது. அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையின் போது அவர் மன உளைச்சலில் இருக்கிறார் என போலீஸார் தெரிவித்தனர். அனைவரையுமே சயனைடு கொடுத்து இதே முறையில் அந்த பெண் கொன்றிருக்கிறார். இறந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், தங்கள் உறவினரின் நகைகள், பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை காணவில்லை என புகாரளித்திருந்தனர். எனவே கொலைக்கான நோக்கம் பணம்தான் என்று தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் சாராரத்சிங்கின் வழக்கறிஞர், சாராரத் சிங் சிவுதார்போர்ன் கர்ப்பமாக இருக்கிறார். அவர் மீது காவல் துறையினர் சந்தேகப்படுவது சரியல்ல. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் வேறு ஏதேனும் கொலை செய்திருக்கிறார் என காவல் துறை நிரூபித்தால் இந்தக் குற்றத்தை அதோடு பொருத்திப் பார்க்க முடியும். சாராரத் சிங் எந்தக் குற்றமும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த காவல் துறை இதற்கு முன்னர் நடந்த இறப்புகள் குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அதனால் அது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அதனால் முந்தைய மரணங்களிலிருந்து ஆதாரங்களை மீட்டெடுப்பது சவாலான விஷயம். மேலும் இதற்கு முன்னர் இறந்தவர்களின் குடும்பத்தினர் உயிரிழந்தவர்கள் இயற்கையாக இறந்ததாகவே கருதுகிறார்கள் என விளக்கமளித்திருக்கிறார்கள். எனினும் அந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications