For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிரை பணயம் வைத்து மூன்றே நாட்களில் மீட்ட மீட்பு படையினர்

உயிரை பணயம் வைத்து மூன்றே நாட்களில் மீட்பு குழுவினர் எந்த வித பாதிப்பும் இன்றி சிறுவர்களையும் பயிற்சியாளரையும் மீட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தாய்லாந்து குகை..சிறுவர்கள் சிக்கியது முதல் மீண்டது வரை!- வீடியோ

    பாங்காங்: உயிரை பணயம் மூன்றே நாட்களில் மீட்பு குழுவினர் எந்தவித பாதிப்பும் இன்றி சிறுவர்களையும் பயிற்சியாளரையும் மீட்டனர்.

    தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகைக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஜூ்ன் 23-ஆம் தேதி இளம் கால்பந்து வீரர்கள் தங்களது பயிற்சியாளருடன் சென்றனர். மொத்தம் 12 சிறுவர்களும் ஒரு பயிற்சியாளரும் சென்றிருந்தனர்.

    Thailand rescue team rescue the students in just 3 days

    அவர்கள் அங்கு சென்ற போது கனமழை கொட்டியது. இதையடுத்து அவர்களால் வெளியேற முடியவில்லை. குகையானது 10 கி.மீ. நீளம் உடைய குகையில் வெள்ள நீர் புகுந்து விட்டது. குகையும் குறுகலாக இருந்தது.

    வேறு வழியில் குகையை சென்றடையலாம் என்றால் மலையிலிருந்து 1 கி.மீ. ஆழம் கொண்டிருந்தது. இதனால் பாறையை உடைத்தெடுத்து மீட்கலாம் என்று திட்டமிட்டனர். ஆனால் பாறையை உடைத்தால் முழுவதுமாக சரிந்துவிடும் என்பதால் அந்த யோசனையும் கைவிடப்பட்டது.

    இதனால் ஸ்கூபா டைவிங் கலைஞர்கள் 19 பேர் வரவழைக்கப்பட்டனர். இதனிடையே அவர்கள் மீட்பது குறித்து பயிற்சி எடுத்து கொண்டனர். நீருக்கு அடியில் செல்லக் கூடிய நீர் மூழ்கி கப்பலை மிகவும் குறுகிய நேரத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்தது.

    இதையடுத்து மீட்பு பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதையடுத்து நேற்றும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இன்றைய தினம் மீதமுள்ள 4 சிறுவர்களும் ஒரு பயிற்சியாளரும் மீட்கப்பட்டனர்.

    மூன்றே நாளில் மிகவும் சவாலான குகையிலிருந்து சிறுவர்கள் மீட்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு மீட்பு படையினருக்கு பாராட்டுகள் குவிந்தன.

    English summary
    Thailand rescue team rescue the students and their coach in just 3 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X