பசி, பசி, அகோரப் பசி... 3 வயதில் 70கி எடை - பிரேசில் சிறுவனின் வினோத நோய்!

Subscribe to Oneindia Tamil

பிரேசிலியா: ப்ரேடர்-வில்லி சிண்ட்ரோம் என்ற நோயின் காரணமாக பிரேசிலில் 3 வயது சிறுவன் ஒருவன் சுமார் 70 கி எடையுடன் அவதிப்பட்டு வருகிறான்.

பிரேசில் நாட்டை சேர்ந்த மைக்கேல் என்பவரின் மகன் மிசேல். 2.9 கிலோ எடையுடன் பிறந்த மிசேல், சராசரி குழந்தைகளை விட அதிகளவில் உணவு எடுத்துக் கொள்வதுடன், அசுர வேகத்தில் எடையும் அதிகரிப்பது கண்டு அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

காலப்போக்கில் இது சரியாகிவிடும் என நினைத்த அவனது பெற்றோர், மாதம் 2.5 கிலோ வீதம் அவனது எடை தொடர்ந்து அதிகரிக்கவும் மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளனர்.

The 3-year-old boy who weighs 150lb due to syndrome that means he just can't stop eating

ப்ரேடர் வில்லி சிண்ட்ரோம்...

மிசேலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு ப்ரேடர் - வில்லி சிண்ட்ரோம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பசி... பசி... பசி...

இந்நோயின் காரணமாகவே மிசேலுக்கு அளவுக்கதிகமாக பசி எடுப்பதுடன் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இரு மடங்கு உணவு...

தற்போது 3 வயதாகும் மிசேல் 70 கிலோ எடையுடன் காணப்படுகிறான். தினமும் ஐந்து முதல் ஆறு தடவை உணவருந்தும் மிசேல், மற்றவர்கள் எடுத்துக்கொள்வதை விட இரு மடங்கு அதிகமாக சாப்பிடுவதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

நடக்கவே சிரமம்...

மிசேலைப் பார்ப்பவர்கள் அவனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதாக அவனது பெற்றோர் கூறுகின்றனர். ஆனால், எடை அதிகரிப்பால் தற்போது மிசேலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கே மிகவும் சிரமமாக இருக்கிறதாம்.

வேதனை....

இதனால், மிசேலை வெளியில் அழைத்துச் செல்வதற்கென்றென்றே பிரத்யேகமாக கார் ஒன்றை வாங்கியுள்ளதாக கூறும் அவனது அப்பா, மகனின் நோயைத் தான் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என வேதனையுடன் கூறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+