உலகின் காஸ்ட்லியான நகரங்கள் பட்டியல் வெளியீடு: இந்தியாவில் இருந்து எத்தனை நகரங்கள் தெரியுமா?
உலகின் காஸ்ட்லியான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நியூயார்க்: மெர்சர்ஸ் 2017 உலகின் காஸ்ட்லியான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அங்கோலா நாட்டின் லுவான்டா நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
நியூயார்க்கின் மெர்செர்ஸ் நிறுவனம் உலகின் காஸ்ட்லியான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. 5 கண்டங்களைச் சேர்ந்த 209 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொரு நகரிலும் தங்குமிடம், போக்குவரத்து, உணவு, உடை, வீட்டு உபகரணப் பொருட்கள், பொழுதுபோக்கு என 200க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவு கணக்கிடப்பட்டது.

காஸ்ட்லியான லுவாண்டா
இதில் அங்கோலா நாட்டின் தலைநகர் லுவான்டா நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்நகரத்தில் மாதம்தோறும் 4,805 பவுண்டுகள் ஆகும். ஒரு லிட்டர் பால் 2 பவுண்டுகள், பாஸ்ட் புட்டில் ஒரு சாப்பாடு 11.50 பவுண்டுகள், பிரட் 15.19 பவுண்டுகள் என பொருட்களின் விலை கேட்கும் போதே கிறுகிறுக்க வைக்கிறது.

2,3ல் சீனா, ஜப்பான்
இரண்டாவது இடத்தில் சீனாவின் ஹாங்காங் நகரம் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளது.

சிங்கப்பூருக்கு 5வது இடம்
நான்காவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரம் உள்ளது. 5வது காஸ்ட்லி நகரமாக சுற்றுலாவுக்கு பெயர்போன சிங்கப்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் - 9வது இடம்
ஆறாவது காஸ்ட்லி நகரமாக சியோலும் காஸ்ட்லி நகரங்கள் பட்டியலின் 7வது இடத்தில் ஜெனிவாவும் உள்ளன. எட்டாவது காஸ்ட்லி நகரமாக ஜெனிவா இடம் பிடித்துள்ளது. 9வது காஸ்லி நகரமாக அமெரிக்காவின் நியூயார்க் பட்டியலில் உள்ளது.

இந்தியாவிலிருந்து 5 நகரங்கள்
பட்டியலில் பத்தாவது இடத்தை பெர்ன் நகரம் பிடித்துள்ளது. உலகின் காஸ்ட்லியான நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் 5 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

135வது இடத்தில் சென்னை
மும்பை 57வது இடத்தையும் தலைநகர் டெல்லி 99வது இடத்தையும் பிடித்துள்ளன. சென்னை 135வது இடத்தையும் பெங்களூரு 166வது இடத்தையும் பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு காஸ்ட்லியான நகரங்கள் பட்டியலில் 184வது இடம் கிடைத்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications