12 வயசாயிருச்சுன்னா.. பொம்பளைப் புள்ளைங்க எல்லாம் ஆம்பளைப் பசங்களா மாறிடுறாங்களாம்...!

Subscribe to Oneindia Tamil

டோமிங்கோ: டொமினிகன் குடியரசு நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், பெண் குழந்தைகள் 12 வயதில் ஆணாக மாறும் வினோதம் நடந்து வருகிறது. இதற்கான காரணங்கள் குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த அதிசய கிராமம் விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக பலரும் ஆய்வில் குதித்துள்ளனர்.

ஆப்பிரிக்க் கண்டத்தில் உள்ள சிறிய நாடுதான் இந்த டொமினிக்கன் குடியரசு.

The astonishing village where little girls turn into boys aged 12

டொமினிகன் குடியரசு நாட்டில் உள்ள மிகவும் உள்ளடங்கிய கிராமம் சலினாஸ். இங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒன்று, 12 வயதில் ஆணாக மாறி விடுகிறது.

இக்குழந்தைகள் பிறந்ததில் இருந்து சிறுமியாகவே வளர்ந்து, 12 வயதில் பருவம் அடையும் போது சிறுவனாக மாறி விடுகிறார்கள். இதனால் இந்தக் கிராமம் அதிசய கிராமமாக பார்க்கப்படுகிறது.

இந்தச் சிறுமிகளுக்கு 12 வயதில் பெண்ணுறுப்பு மறைந்து ஆணுறுப்பு தோன்ற ஆரம்பித்து விடுகிறது. மிகவும் அரிதான மரபணு குறைபாட்டால் இவ்வாறு நிகழ்வதாக கூறும் உயிரியல் நிபுணர்கள், தொடர்ந்து இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

12 வயதில் மாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தாலும், 5 வயதில் இருந்தே இந்த மாற்றம் ஏற்பட தொடங்குவதாக சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் கூறுகின்றனர்.

அதோடு, 12 வயதில் ஆணாக மாறும் இந்த சிறுமிகள் தொடர்ந்து ஆணாகவே வளர்கிறார்களாம். இவர்கள் ஆண்களாக மாறி திருமணம் செய்து குடும்பமாக வாழ்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+