இங்கிலாந்து தேர்தல்: 20 வயதில் எம்.பியான மெஹைரி பிளாக்...
லண்டன்: 1967ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு மிக மிக இளம் வயது பெண் எம்.பி. ஒருவர் தேர்வாகியுள்ளார். அவருக்கு வயது 20 மட்டுமே.
எஸ்.என்.பி. கட்சியின் சார்பில் தேர்வாகியுள்ள மெஹைரி பிளாக், ஸ்காட்லாந்தின் பெய்ஸ்லி என்ற தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார். லேபர் கட்சி சார்பில் போட்டியிட்ட டக்ளஸ் அலெக்சாண்டரை அவர் தோற்கடித்துள்ளார்.

20 வயதான பிளாக், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு அரசியல் பட்டப் படிப்பை படித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பை முடிக்கும் முன்பே அவர் அரசியல்வாதியாகி விட்டார்.
ஆனால் இவர் மீது ஏற்கனவே சில சர்ச்சைகள் உள்ளன. ஆபாசமாகப் பேசுவார், குடிக்கு அடிமையானவர் என்றெல்லாம் இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் ஏற்கனவே செய்திகள் பரவியுள்ளன.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிளாக், கால்பந்து விளையாட்டு என்றால் மிகவும் உயிராக இருப்பார். மேலும் மதுப் பிரியையும் கூட அதிலும் ஸ்மிரன்ஆப் என்றால் இவருக்கு உயிராம். அது கடவுள்களின் மது பானம் என்றும் வர்ணித்துள்ளார் பிளாக்.
இவர் மீது பல சர்ச்சைகள் இருந்தாலும் கூட நாடாளும்ன்றத் தேர்தலில் அசத்தலாக வென்று சாதித்துள்ளார் பிளாக். இவருக்கு ஆதரவாக 23,548 வாக்குகள் கிடைத்தன. அலெக்சாண்டருக்கு வெறும் 17,854 வாக்குகளே கிடைத்தன. அலெக்சாண்டர் முன்னாள் அமைச்சர் ஆவார். ஸ்காட்லாந்தில் எஸ்.என்.பி. கட்சி அதிக இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிளாக்கின் தந்தை ஆலன் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். அவர்தான் தேர்ல் பிரசாரத்தின்போது மகளுக்கு உதவியாக இருந்தார். சமூகத்தில் நிலவும் வருமை மற்றும் சமச்சீரற்ற தன்மையைப் போக்கவே தான் அரசியலில் குதித்ததாக கூறுகிறார் பிளாக்.
பிளாக் வாயைத் திறந்தாலே போதும்... பலான பலான வார்த்தைகள் பலமாக கொட்டுமாம். கோபம் வந்து விட்டால் பச்சை பச்சையாக பேசி விடுவாராம். நாடாளுமன்றத்திலும் இவர் குடிபோதையில் இருப்பாரா, ஆபாசமாகப் பேசி அதகளப்படுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications