நியூயார்க்கை முற்றுகையிட்ட பறவைகள்.. ஒன்று கூடி புடின் முகம் போல காட்சி தந்ததால் பரபரப்பு!
நியூயார்க்: நியூயார்க் நகரின் வானில் முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான பறவைகள் திடீரென ஒன்று கூடியபோது, அது பார்க்க ரஷ்ய அதிபர் புடின் முகம் போலவே இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வீடியோவை ஷெரில் கில்பர்ட் என்பவர் எடுத்து யூடியூபில் வெளியிட்டுள்ளார். இது வைரல் ஆகியுள்ளது. பல ஆயிரம் ரஷ்யர்கள், இது அமெரிக்காவுக்கு ரஷ்யா விடுக்கும் எச்சரிக்கை என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.

11 விநாடி வீடியோ
மொத்தமே 11 விநாடிகள்தான் அந்த வீடியோ காட்சி தெரிகிறது. அதற்குள் புடின் முகம் போல பறவைகள் கூடி நின்று காட்சி அளித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

காட்டுத்தீயாக பரவுகிறது
இந்த பறவைகள் வீடியோ தற்போது ரஷ்யாவில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. பலரும் இதை தங்களது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அமெரிக்காவுக்கு எதிராக கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர்.

ப்ரூக்ளின் பாலத்திற்கு மேலே
ப்ரூக்ளினில் உள்ள வில்லியம்ஸ்பர்க் பாலத்தைக் கடந்தபோது தற்செயலாக இந்தக் காட்சியைப் பார்த்துள்ளார் ஷெரில். உடனடியாக அந்தப் பறவைகள் கூடுவதை வீடியோ படமாக எடுத்து விட்டார். 11 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவை தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

இது யாருடைய முகம்
முதலில் இது புடின் முகம் என்று யாரும் கூறவில்லை. ஆனால் ஒரு ரஷ்ய டிவி நிறுவனம்தான் இது புடின் முகம் போலத் தெரிவதாக கூறியது. இதையடுத்தே இந்த வீடியோ ரஷ்யாவில் ஹிட் ஆகி விட்டது.

எங்கிருந்தோ வந்த பறவைகள்
பல ஆயிரம் பறவைகள் எங்கிருந்தோ பறந்து வந்து திடீரென ஒன்றாக சேர்ந்தபோது ஒரு முகம் போல அந்தக் காட்சி தென்படுகிறது. இந்த வீடியோவை அப்லோட் செய்தது முதலே யாருடைய முகம் இது என்ற வாதங்கள் கிளம்பி விட்டன.

ஜாப்ஸ் முகமா...
பலர் இது ஸ்டீவ் ஜாப்ஸ் முகம் என்றும் பலர் ராபின் வில்லியம்ஸ் முகம் என்றும் கருத்து தெரிவிக்க ரஷ்ய டிவி நிறுவனம்தான் இதை புடின் முகம் என்று கூறியது.

குவியும் கமெண்டுகள்
இதையடுத்து இப்போது இந்த வீடியோ பெரும் கிராக்கியாகியுள்ளது. பலரும் அந்த வீடியோவைப் பார்த்து கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர்.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
ஒரு ரஷ்யர் போட்டுள்ள கமெண்ட்டில், ரஷ்யாவுடன் போரில் ஈடுபடக் கூடாது என்பதற்கு அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இது என்று கூறியுள்ளார்.
இது சூப்பர் புடின்
இன்னொருவர், வானத்தைப் பாருங்கள்.. இது பறவையா இல்லை விமானமா.. இரண்டும் இல்லை. இது சூப்பர் புடின் என்று கூறியுள்ளார்.
பலர் இது போலியான வீடியோ, செட்டப் வீடியோ என்றும் கமெண்ட் தெரிவிக்கத் தவறவில்லை. மொத்த்தில் இந்த வீடியோவை வைத்து அமெரிக்கர்களை சீண்டிப் பார்த்து வருகின்றனர் ரஷ்யர்கள் என்பது மட்டும் உண்மை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications