அமெரிக்க டாலரின் நாடகம் முடிவுக்கு வந்தது.. கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் சீனாதான்!
வாஷிங்டன்: அமெரிக்க டாலரின் ஆதிக்கம் உலகம் முழுக்க இருக்கிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது என்று பிரபல முதலீட்டு நிறுவனமான யூரிசான் கேப்பிட்டல் தெரிவித்திருக்கிறது.
இதற்கான காரணம் சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் கரன்சிதான் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது. இப்படியே போனால் விரைவில் அமெரிக்கா திவாலாகிவிடும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு வரை ஆசிய நாடுகளான சீனா, தைவான், மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகள் அமெரிக்க டாலரை அதிக அளவு இருப்பு வைத்திருந்தன. நேரடியாக டாலராகவும், மறைமுகமாக கடன் பத்திரங்களாகவும் டாலர் கையிருப்பில் இருந்தது. ஆனால் இவற்றை தற்போது அந்நாடுகள் விற்க தொடங்கிவிட்டன. ஒரே நேரத்தில் எல்லா டாலரும் சந்தைக்கு வந்ததால் அதன் மதிப்பு சரிவை கண்டிருக்கிறது. வாங்க ஆள் இல்லாமல் டாலர் தண்ணி தெளித்து தனித்துவிடப்பட்டிருக்கிறது.
இந்த நாடுகள் மொத்தம் 2.5 டிரில்லியன் அளவுக்கு டாலரை சந்தையில் இறக்கியுள்ளன. எனவே சர்வதேச சந்தை ஆடிப்போய் இருக்கிறது.
டாலருக்கான மதிப்பே தனி. இது ரிசர்வ் கரன்சி. அதாவது அவசர நேரத்தில் பொருட்களை வாங்க இது அவசியம். எனவே இந்தியா போன்ற நாடுகள் டாலரை அதிக அளவில் சேமித்து வைக்கும். ஒவ்வொரு நாட்டின் டாலர் கையிருப்புதான் அந்நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும். இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த டாலரை சீனா கோயில் மாடு போல மாற்றி சுற்றவிட்டிருக்கிறது. சந்தையில் சுற்றும் கோயில் மாடால் ஏதேனும் பிரயோஜனம் உண்டா? அதை வைத்து பால் கூட கறக்க முடியாது. ஏறத்தாழ இந்த நிலைமைக்கு தற்போது டாலர் மாறியிருக்கிறது.
இதனால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, உலகளாவிய முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். உலக சந்தையில் பதற்றம் ஏற்படப்போகிறது.
ஏற்கெனவே டாலர் மதிப்பு சரிந்திருப்பதால், அதை சேமித்து வைத்திருக்கும் நாடுகளும், விற்க தொடங்கும். சீனா, மலேசியா, வியட்நாம், தைவான் என வெறும் 4 நாடுகள் மட்டும் தங்கள் கையிருப்பு டாலரை விற்க வந்ததால் இவ்வளவு பாதிப்பு எனில், ஒவ்வொரு நாடுகளும் இதை செய்ததால் டாலர் மதிப்பு எப்படி சரியும் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இதை ஆங்கிலத்தில் அவலாஞ்ச் என்று சொல்வார்கள். அப்படியெனில் பனிச்சரிவு என்று பொருள்.
கடந்த வாரம் தைவான் டாலருக்கு எதிராக அமெரிக்க டாலர் 9% வரை வீழ்ச்சியை சந்தித்தது. இது 2007க்கு பின்னர் ஏற்படும் மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications