தீவிரவாதத்தைத் தூண்டுகிறதாம் ‘ரா’... பாயும் பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: இந்திய உளவுத்துறையான ‘ரா' அமைப்பு பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் எய்ஜாஸ் அகமது சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா், அண்மையில் பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர், இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா'விடம் பயிற்சி பெற்றவர்கள் என்று சந்தேகிப்பதாக தொிவித்தாா்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பேருந்தை வழிமறித்து தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 47 பயணிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இது குறித்து பேசிய சவுத்ரி, இந்த கொடூரத் தாக்குதலில், இந்தியாவின் உளவுத்துறையான ‘ரா'வுக்கு தொடர்பு இருப்பது காண்டுபிடிக்கப்பட்டால், பாகிஸ்தான் இவ்விவகாரத்தை சர்வதேச நாடுகளிடம் எடுத்து செல்லும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்ற பிரசுரங்கள் காணப்பட்டதாகவும், ஆனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் தான் பொறுப்பு என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் சவுத்ரி தெரிவித்தார்.
கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவ தலைமை அதிகாரி, பாகிஸ்தானில் இந்திய ‘ரா' அமைப்பின் செயல்பாடு தொடர்பாக கவலை தெரிவித்து இருந்ததையும் அவா் சுட்டிக்காட்டினாா்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் அணமையில் ஆப்கானிஸ்தான் சென்றபோது, ‘ரா' விவகாரத்தை அந்நாட்டிடமும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
"பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட, இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா'வை ஆப்கானிஸ்தான் மண்ணில் இயங்க அனுமதிக்க கூடாது என்று பாகிஸ்தான் பிரதமா் நவாஸ் செரீப் ஆப்கானிஸ்தானிடம் கேட்டுக் கொண்டுள்ளாா் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications