அதிமுக தேர்தல் அறிக்கை அனைத்து வாக்குறுதிகளுக்கும் 'தாயாக' திகழ்கிறது - தி ஐரிஷ் டைம்ஸ் பத்திரிகை
டப்ளின்: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை உலக அனைத்து வாக்குறுதிகளுக்கும் தாயாக திகழ்கிறது என்று தி ஐரிஷ் டைம்ஸ் என்ற நாளிதழ் விமர்சித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழக தேர்தல் களம் ஆறு முனை போட்டியை சந்திக்கிறது. இதில் யார் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்ற கேள்விக்கு விடை மே 19 ஆம் தேதி தெரியவரும்.
இந்நிலையில் தி ஐரிஷ் டைம்ஸ் என்ற அயர்லாந்து பத்திரிகை, அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து, அனைத்து தேர்தல் வாக்குறுதிகளுக்கும் தாய் என கூறியுள்ளது. மேலும், இதுபோன்று இலவசங்களை வாரி இறைக்கும் ஒரு கட்சியை அயர்லாந்தில் பார்க்க முடியுமா என்றும் அப்பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.
இலவச செல்போன்கள், தாலிக்கு 8 கிராம் தங்கம் இலவசம், பெண்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க 50 சதவீதம் மானியம் என பல்வேறு அறிவிப்புகள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ள நிலையில், அதற்கு போட்டியாக பல்வேறு அறிவிப்புகளை அதிமுக வெளியிட்டுள்ளதாக ஐரிஷ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications