டூம்ஸ்டே விமானத்தில்.. ரகசிய இடத்திற்கு பறந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு? கைமீறும் நிலைமை?

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழிவிற்கான விமானம் எனப்படும் டூம்ஸ்டே விமானத்தில் தப்பி சென்றதாக தகவல்கள் வருகின்றன.

அணு ஆயுதப் போர், பேரழிவு அல்லது முக்கிய இராணுவ மற்றும் அரசாங்க உள்கட்டமைப்பை அச்சுறுத்தும் பெரிய அளவிலான போரின் போது பெரிய தலைவர்கள், அதிபர்கள் தப்பிப்பதற்காக பயன்படுத்தும் விமானம்தான் டூம்ஸ்டே விமானம் என்பது ஆகும். அணு ஆயுதம் கொண்ட இந்த விமானம் ரேடாரில் பெரிய அளவில் சிக்காமல் செல்லும் திறன் கொண்டது. இதுவரை அத்தகைய விமானங்களை வடிவமைத்து தயாரித்த நாடுகள் அமெரிக்கா மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு மட்டுமே.

The Israeli Governments Doomsday plane has taken off reportedly and is the only plane leaving Israel

இந்த விமானம் இஸ்ரேலிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானங்கள் பொதுவாக தீவிர தாக்குதல்களை தாக்கு பிடிக்கும். அதேபோல் விமானத்திலேயே சில நாட்கள் பாதுகாப்போடு இருக்கவும் உள்ளே வசதிகள் இருக்கும்.

இஸ்ரேல் ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழிவிற்கான விமானம் எனப்படும் டூம்ஸ்டே விமானத்தில் தப்பி சென்றதாக தகவல்கள் வருகின்றன. அவர் , அதிபர், மற்றும் மொத்த அமைச்சரவை இதில் தப்பி ரகசிய இடத்திற்கு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் போர் பெரிதாக போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு நாடுகளின் மோதல்: இஸ்ரேல் மீது ஈரான் திடீரென ஏவுகணை தாக்குதல்களை மேற்கொள்ள முக்கியமான சில காரணங்கள் உள்ளன. இரண்டு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் மாபெரும் போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.

சிரியா தாக்குதல்: சிரியாவின் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை. ஏற்கவும் இல்லை. ஏகப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மாறி மாறி சிரியா மீது ஏவியதாக கூறப்படுகிறது. சிரியாவில் ஹெஸ்புல்லா படையினர் உள்ளனர். இவர்கள் ஈரான் ஆதரவு போராளிகள். இவர்கள்தான் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

தூதரக அட்டாக்: இந்த தாக்குதலுக்கு இடையில்தான் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் அப்போது நடந்தது.

ஈரானிய இராணுவத் தளபதிகள் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்திற்குள் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுவது பாதுகாப்பானது என்று நினைத்து அங்கே கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். , சர்வதேச விதிமுறைகளின் படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது.

ஆனால் சர்வதேச யுஎன் விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார்.

இந்த தாக்குதலுக்குத்தான் தற்போது ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டுள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

200 ஏவுகணைகளை டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் இன்னும் இஸ்ரேலை அடையவில்லை. விரைவில் அவை இஸ்ரேல் மீது சென்று தாக்குதலை ஏற்படுத்தும். சில ஏவுகணைகள் தற்போதைக்கு இஸ்ரேலின் ராணுவ தளவாடங்களை தாக்கி லேசான சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர்தான் இந்த ஈரான் தாக்குதலுக்கு காரணம். பாலஸ்தீனத்தை இஸ்ரேல் விடாமல் தாக்கி வந்ததை ஈரான் விரும்பவில்லை. இந்த போர் பாலஸ்தீனத்திற்கு ஈரான் மறைமுகமாக உதவி வந்தது. இப்போது நேரடியாக இது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போராக மாறி உள்ளது.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+