ஊதா கலரு ரிப்பன்.. எப்படி ஆயிருச்சு பாருங்க ஜப்பான்!
டோக்கியோ: ஜப்பானிய ஆண்கள் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வதை விட கம்ப்யூட்டர் அனிமேஷனில் வரும் பெண்களுடன்தான் செக்ஸுக்காக அதிக நேரம் செலவிடுகிறார்களாம்....
உலக அளவில் மக்கள் தொகை வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்று.
ஜப்பானில் 2060ம் ஆண்டு வாக்கில் அதன் மக்கள் தொகை இப்போதிருப்பதை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்புக்கு முக்கியக் காரணமே.. அங்குள்ள ஆண்கள் மத்தியி்ல செக்ஸ் குறித்த ஆர்வம் இல்லாததே.

அது என்ன ஒடக்கு...?
ஜப்பானிய ஆண்களிடையே தற்போது புதிதாக ஒரு குரூப் கிளம்பியுள்ளது. இந்த ஆண்களுக்கு ஓடக்கு என்று பெயர் வைத்துள்ளனர்.

இவங்க என்ன செய்வாங்க...?
இந்த ஒடக்குகளுக்கு நிஜமான பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளப் பிடிக்காதாம். மாறாக கம்ப்யூட்டர்களில் வரும் கிராபிக்ஸ், அனிமேஷன் பெண்களுடன்தான் காதல் கொள்கிறார்களாம். அதில் வரும் செக்ஸ் வேடிக்கைகளைப் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்கிறார்களாம்.

நகரம் பெரிதுதான்.. ஆனால் கூட்ட நெரிசலே இல்லை!
ஜப்பான் தலைநகர் டோக்கியோ, உலகிலேயே மிகப் பெரிய பெருநகரமாகும். இங்கு மூன்றரை கோடி பேர் வசிக்கிறார்கள். இருப்பினும் இங்கு நெரிசலே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

ஒடக்குகளின் கூடாரம் அகிஹபரா
டோக்கியோவில் அகிஹபரா என்ற ஒரு இடம் உள்ளது. இங்குதான் இந்த ஒடக்கு ரக ஆண்கள் அதிகம் அலைமோதுகிறார்களாம். கிட்டத்தட்ட ஒடக்குகளின் சொர்க்கபுரியாக இது வர்ணிக்கப்படுகிறது.

பெண் பொம்மைகள் விற்பனை
இந்தப் பகுதியில் அதிக அளவிலான பெண் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றனவாம். இதை வாங்க ஒடக்குகள் அதிக அளவில் வருகிறார்களாம். இந்த பொம்மைகளுக்கு அனிமே என்று பெயர்.

செல்போனில் செக்ஸ் பொம்மைகள்
இந்த ஒடக்கு ஆசாமிகள், தங்களது செல்போன்களில் பெண் அனிமேஷன் காட்சிகளை டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டு அதை ரசிக்கிறார்களாம். அந்த அனிமேஷன் செக்ஸைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்களாம். மேலும் அகிஹபராவுக்குப் போய் செக்ஸ் பொம்மைகளை வாங்கி அதைக் கொண்டும் திருப்திப்பட்டுக் கொள்கிறார்களாம்.

ஆசையே இல்லாத இளைஞர்கள்
இதுகுறித்து ஜப்பான் குடும்ப திட்டமிடல் கழகத்தின் குனியோ கிடம்பரா கூறுகையில், ஜப்பானிய இளைஞர்கள் தற்போது ஹெர்பிவோரஸாக மாறி வருகின்றனர். அதாவது அவர்களுக்கு ஆசை இல்லை, செக்ஸ் வேண்டும் என்ற வேட்கை இல்லாமல் போய் விட்டது.

சோம்பேறிகளாகி விட்டனர்
உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானை கட்டி எழுப்பிய ஆண்களைப் போல இப்போது எந்த ஜப்பானியரும் இல்லை. பொருளாதார சக்தியாக நாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் உத்வேகம் அவர்களிடம் இல்லை. வேலை பார்க்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் குறைந்து வருகிறது. இது கவலை தருகிறது.

சுருண்டு கிடக்கிறார்கள்
எப்போதும் சுருண்டு போய் அடைந்து கிடக்கிறார்கள். கவலையுடன் உள்ளனர். உறவுகளை விட்டுப் பிரிந்து நிற்கின்றனர். செக்ஸை வெறுக்கிறார்கள் என்றார்.

36 சதவீதம் பேருக்கு செக்ஸ் பிடிக்கவில்லை
2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில், 16 முதல் 19 வரையிலான ஜப்பானிய இளைஞர்கள் மத்தியில் 36 சதவீதம் பேருக்கு செக்ஸில் நாட்டம் இல்லையாம். இது கடந்த 2 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரிங்கோ.. நே நே
யூஜி மற்றும் நூரிகன் என்று இரண்டு இளைஞர்கள். இவர்களது காதலியர் யார் தெரியுமா.. ரிங்கோ மற்றும் நே நே என்ற பெயரிலான அனிமேஷன் பெண்கள்தான். இவர்களுடன்தான் எப்போதும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

லவ் பிளஸ்
இந்த அனிமேஷன் பெண்கள் இருவருமே, லவ் பிளஸ் என்று அழைக்கப்படும் கம்ப்யூட்டர் கேம்ஸில் உள்ள சித்திரங்கள். இந்த விளையாட்டை, தங்களது டேப்லெட்டில் டவுன்லோடு செய்து கொண்டு அவர்களுடன்தான் எப்போதும் காதல் விளையாட்டில் மூழ்கியுள்ளனராம் யூஜியும், நூரிகனும்.
எப்படி ஆயிருச்சு பாருங்க ஜப்பான்...!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications