வைரலாகப் பரவும் தீவிரவாதியின் பிடியிலிருந்து தப்பி ஓடி வந்த சீன மாணவியின் படம்!
சிட்னி: சிட்னி ஹோட்டலிலிருந்து தீவிரவாதியின் பிடியிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்த சீனாவைச் சேர்ந்த எல்லி சென் என்ற மாணவி சமூக வலைதளங்களில் பிரபலமாகி விட்டார்.
நியூசெளத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிதான் எல்லி சென்.
இவர் பகுதி நேரமாக சிட்னியில் உள்ள லின்ட் சாக்கலேட் கேஃப் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

சிக்கிக் கொண்ட எல்லி:
வழக்கம் போல இன்றும் பணிக்குச் சென்ற அவருக்கு மரண பயத்தைக் காட்டி விட்டான் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த தீவிரவாதி. சிட்னி ஹோட்டலில் நீடித்து வரும் முற்றுகைப் போராட்டத்தில் எல்லியும் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில்தான் அங்கிருந்து தப்பி ஓடி வந்த ஐந்து பேரில் ஒருவராக எல்லியும் இன்று வெளியேறினார்.

பதற்றம் நிறைந்த முகத்துடன்:
ஹோட்டலுக்குள்ளிருந்து எல்லி பயம் முகத்தை தொற்றிய நிலையில் ஓடி வந்த காட்சி வீடியோ மற்றும் புகைப்படமாக வெளியாகியுள்ளது.

வைரல் ஆனது:
இந்தப் படத்தை பலரும் தங்களது பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருகின்றனர். இந்தக் காட்சியும் வேகமாக சமூக வலைதளங்களில் பிரபலமாகி விட்டது. வைரல் ஆக பரவியுள்ளது.

கொடி பிடிக்க மிரட்டல்:
முன்னதாக அந்தத் தீவிரவாதி தனது அமைப்பின் கொடியை ஜன்னலோரமாக உயர்த்திப் பிடிக்குமாறு சில பிணையாளிகளுக்கு உத்தரவிட்டிருந்தான். அதில் எல்லியும் ஒருவர். அந்தப் படமும் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

பீதி அகலாத முகம்:
மரணப் பிடியிலிருந்து மீண்டு பீதி அகலாத முகத்துடன் எல்லி பாதுகாப்புப் படையினரை நோக்கி ஓடி வரும் காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications