ஐஎஸ்ஐஎஸ்ஸில் சேர்த்துவிட 2 குழந்தைகளை கடத்திய தாய் என்ற பேய்
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் வசித்து வந்த செசன்யாவைச் சேர்ந்த பெண் தனது இரண்டு குழந்தைகளை கடத்திக் கொண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா சென்றுவிட்டார்.
செசன்யாவைச் சேர்ந்தவர் உம்(33). அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நெதர்லாந்து வந்த இடத்தில் மார்க் என்பவரை சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு லூக்கா(9) என்ற மகனும், ஆயிஷா(8) என்ற மகளும் உள்ளனர். 2008ம் ஆண்டு வரை தலையில் முக்காடு அணியாமல், தொழுகாமல் இருந்த உம் 2009ம் ஆண்டில் இருந்து மதப்பற்று மிக்கவராக மாறிவிட்டார்.

உம் தனது கணவர் மார்க்கை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு 2 காதலர்கள் மூலம் 2 குழந்தைகளை பெற்றுள்ளார். மார்கிடம் கேட்காமலேயே குழந்தைகளை இஸ்லாமியப் பள்ளியில் சேர்த்தார்.
இந்நிலையில் உம் தனது காதலர்களுக்கு பிறந்த குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு லூக்கா மற்றும் ஆயிஷாவை நெதர்லாந்தில் இருந்து கடத்த முடிவு செய்தார். அதுவும் குழந்தைகளோடு சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர திட்டமிட்டார். இதற்கிடையே உம் தனது குழந்தைகளோடு கிரீஸ் செல்ல விமான டிக்கெட் வாங்கியுள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மார்க்கிடம் தெரிவித்தார்.
அதற்குள் உம், குழந்தைகளோடு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர்கள் தற்போது சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ரக்கா நகரில் இருப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் பல குடும்பங்கள் நெதர்லாந்தில் இருந்து சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர 12 சிறுவர்கள் யாருக்கும் தெரியாமல் நெதர்லாந்தில் இருந்து சிரியா கிளம்பிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications