பிரான்சின் புதிய அதிபர் மேக்ரான்.. 15 வயதிலேயே 25 வயது மூத்த டீச்சரை மணந்து அசத்தியவர்!
பிரான்சின் புதிய அதிபர் இமானுவேல் மேக்ரான் தேர்தலில் வெற்றி பெற்றதை காட்டிலும் அவரது திருமண வாழ்க்கை குறித்தே படு சூடாக பேசி வருகிறார்கள்.
பாரீஸ்: புதிய அதிபர் இமானுவேல் மேக்ரான் தேர்தலில் வெற்றி பெற்றதை காட்டிலும் அவரது திருமண வாழ்க்கை குறித்தே பரவலாக பேசப்பட்டு வருகிறது. காரணம் இல்லாமல் இல்லை.
பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே கடந்த 2012-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவிக்காலம் இன்னும் சில நாள்களில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபருக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில் என் மார்சே கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மேக்ரான், தேசிய முன்னணி கட்சியைச் சேர்ந்த மரின் லீ பென் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

பெரும்பான்மை இல்லை
இந்நிலையில் அதிபராவதற்கான பெரும்பான்மை ஓட்டுகளை யாரும் பெறாததால் இந்த தேர்தலானது மீண்டும் நேற்று நடத்தப்பட்டது. இதில் பிரான்ஸ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

தேர்வு முடிவுகள்
தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. அதில் என் மார்சே கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மேக்ரான் 66 சதவீதம் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 39 வயதே ஆகும் மேக்ரான் வெற்றி பெற்றதை காட்டிலும் அவரது திருமண வாழ்க்கை குறித்துதான் எங்கும் பேச்சாக உள்ளது.

ஆசிரியையை மணந்த மேக்ரான்
ஒரு பள்ளியில் நாடகங்களை கற்றுக் கொடுக்கும் டிராமா டீச்சராக இருந்தவரான பிரிகிடே டிரோக்நியூக்ஸ் என்பவர்தான் மேக்ரானின் மனைவி ஆவார். மேக்ரானுக்கு 15 வயதாக இருந்த தனது டீச்சர் மீது காதல் பிறந்தது. இதையடுத்து இருவரும் மணந்து கொண்டனர்.

2007-ல் திருமணம்
பிரிகிடேவுக்கு அப்போதே 3 மகள்கள் இருந்தனராம். பருவ வயதை எட்டியவர்கள் அவர்கள். கடந்த 2007-ல் திருமணம் நடைபெற்றது. தற்போது 64 வயதான பிரிகிடே தனது 39 வயது முன்னாள் மாணவனும், கணவனுமான மேக்ரானுக்கு அதிபர் என்ற மிகப் பெரிய நாடக மேடையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications