புற்றுநோய் சிகிச்சையில் விளாடிமிர் புடின்? கை மாறுகிறதா அதிகாரம்? அமெரிக்காவிற்கு பறந்த ரகசிய தகவல்!
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்றும், அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான நிகோலாய் பட்ருஷேவிடம் தற்காலிகமாக அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இரு மாதங்களை கடந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் அங்கு நிலைமை மிக மோசமாகி வருகிறது. பல லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அந்நாடு மீண்டு வருமா என்பதே கேள்விக்குறிதான்.
இந்நிலையில் போர் தொடர்பான செய்திகளை விட ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினின் உடல்நலம் குறித்து வதந்திகள் தான் அதிகம் உலாவுகின்றன. அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

புடின் உடல்நலன்
கடந்த சில ஆண்டுகளாக விளாடிமிர் புடினின் உடல் மொழி மற்றும் அவர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய விதம் குறித்து பல சுகாதார நிபுணர்கள் ஆய்வு செய்ததில் பல யூகங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்றும், அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான நிகோலாய் பட்ருஷேவிடம் தற்காலிகமாக அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் அதனை உறுதிப்படுத்தவும் இல்லை.

புற்றுநோய் அறுவை சிகிச்சை
புடினுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும், முன்னாள் ரஷ்ய வெளிநாட்டு புலனாய்வு லெப்டினன்ட் ஜெனரலால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் டெலிகிராம் சேனலை செய்தி நிறுவனமான ANIஐ மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. அவருக்கு மேற்கொள்ள இருக்கும் அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகள் புடினை "குறுகிய காலத்திற்கு" செயலிழக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிக்கை கூறியது.

வதந்தி பரவல்
சமீப காலங்களில் புடினின் நோய் தாக்கியது போல் உள்ள தோற்றம் மற்றும் பொது இடங்களில் இயல்பற்ற பதட்டமான நடத்தை பற்றி குறிப்பிட்டுள்ள நியூயார்க் போஸ்ட், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பார்கின்சன் நோய் உட்பட பல கடுமையான நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் வதந்தி பரவியுள்ளது. இதுகுறித்து திங்களன்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், " இதுபோன்ற தகவல்களை உறுதிப்படுத்த ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை" என்றார்.

உடல்நிலை மோசம்
சில நாட்களுக்கு முன்பு புடின், நிகோலாய் பட்ருஷேவிடம் இரண்டு மணி நேரம் மனது விட்டு பேசியதாகவும் நியூயார்க் போஸ்ட் மேற்கோள் காட்டி கூறியது. அவருடைய ஒரே நம்பகமான கூட்டாளியாகவும் நண்பராகவும் நிகோலாயை புடின் கருதுகிறார் "அவரது உடல்நிலை மோசமடைந்தால், நாட்டின் உண்மையான கட்டுப்பாடு தற்காலிகமாக பட்ருஷேவின் கைகளுக்குச் செல்லும் என்று அவர் அப்போது உறுதியளித்தார்." எனவும் கூறப்படுகிறது.
Recommended Video

நிகோலாய் பட்ருஷேவ்க்கு அதிகாரம்
நிகோலாய் பட்ருஷேவ் உள்ள ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில், புடினுக்கு நேரடியாக பதிலளிக்கும் மற்றும் ரஷ்யாவிற்குள் இராணுவ மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கும் ஒரு செல்வாக்கு மிக்க அமைப்பாகும். புடினின் நம்பகமான கூட்டாளியாக அவர் கருதப்படுகிறார். புடினைப் போலவே, பட்ருஷேவும் ஒரு தொழில் ரஷ்ய உளவுத்துறை ஏஜெண்ட் தான்முதலில் சோவியத் KGB உடன், பின்னர் ரஷ்ய FSBவிலும் பணியாற்றினார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications