என்னா மனுஷன்யா.. பிரேக்-அப் பிரச்னையை தீர்க்க ரூ.32 கோடியா?ஆமா, அதென்ன லவ் பெட்டர்? என்னன்னு பாருங்க
வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் காதல் தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்காக அந்நாட்டு அரசு 'லவ் பெட்டர்' எனும் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது. காதல் தோல்வி காரணமாக இளைஞர்கள் பலர் தவறான பாதையில் சென்று விடுகிறார்கள் என்பதால் அதனை தடுக்கவே அந்நாட்டு அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
இந்த உலகம் இருக்கும் வரை காதல் இருக்கும். காதல் இருக்கும் வரை காதல் தோல்விகளும் இருக்கத்தானே செய்யும். எந்த அளவுக்கு காதலை புரிந்துகொள்கிறோமோ அந்த அளவுக்கு காதல் தோல்வியும் நாம் புரிந்துகொள்வோம் என்று ஒரு பழமொழி இருக்கிறது. அது உண்மையும் கூடதான். காதல் தோல்வியில் ஆசிட் வீசுவது, கொலை செய்வது, மிரட்டுவது, அவதூறு செய்வது இதெல்லாம்தான் காதல் நமக்கு சொல்லி தந்ததா? ஆனால் யதார்த்தத்தில் நம்மில் பலர் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.
இல்லையெனில் நம்முடைய வாழ்க்கையை போதை பொருட்களில் தொலைத்துவிடுகிறோம். இந்த பிரச்னைகள் காலங்காலமாக இருந்து வந்தாலும், உலகம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாடுகள் சமீப காலமாக மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. எனவே காதல் தோல்வியில் இருக்கும் இளைஞர்கள் மிக எளிதாக போதை பொருளுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதிலிருந்து மீண்டு வர நண்பர்கள், பெற்றோர்கள் உதவ வேண்டும். ஆனால் நியூசிலாந்தில் ஒருபடி மேலே போல இந்த உதவியை செய்ய அந்நாட்டு அரசே முன்வந்திருக்கிறது.

பிரசாரம்
இது அந்நாட்டு ஆட்சியாளர்களின் அரசியல் புரிதல் எந்த அளவுக்கு பக்குவமடைந்திருக்கிறது என்பது ஓர் எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. நியூசிலாந்து அரசு இதற்கான பிரசாரத்தை 'லவ் பெட்டர்' என்கிற தலைப்பில் மேற்கொண்டிருக்கிறது. இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், "இதில் அனுபவமிக்க நபர்களை நாங்கள் இளைஞர்கள் மத்தியில் பேச வைக்கிறோம். அவர்களும் காதல் தோல்விகளை கடந்துதான் வந்திருப்பார்கள். ஆனால் போதை பொருட்களுக்கு அடிமையாகியிருக்க மாட்டார்கள். எனவே இவர்கள் கொடுக்கும் நம்பிக்கை, அனுபவ பகிர்வு காதல் தோல்வியில் இருக்கும் இளைஞர்களை மீட்டு கொண்டுவர நிச்சயம் உதவும்.

பிரேக்-அப்
காதல் தோல்வியில் இருப்பவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவார்கள் என்றாலும், மற்றொருபுறம் குடும்பத்திற்கும் அவர்களுக்கும் இடையேயான உறவில் நிச்சயம் விரிசல் ஏற்படும். இது குறித்தும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே எங்களுடைய இந்த 'லவ் பெட்டர்' பிரசாரம் பெரிய அளவில் அவர்களுக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறோம். எங்கள் திட்டத்தின்படி இந்த பிரசாரம் 3 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்படும். இதற்காக ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மொத்த திட்டங்களையும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்துகிறது. இதில் தேவைக்கேற்ப சில மாற்றங்களும் செய்யும் யோசனை இருக்கிறது.

87 சதவிகித இளைஞர்கள்
சுமார் 1,200 பேர்கள் எங்களிடம் காதல் தோல்வியிலிருந்து மீண்டு வர உதவி கோரியது. ஏற்கெனவே நியூசிலாந்தில் பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் எங்களிடம் கோரிக்கை வைத்தது எங்களுக்கு விடுக்கப்பட்ட சவாலாகதான் பார்க்கிறோம். நாங்கள் திட்டமிட்டபடி சரியாக அனைத்தும் செய்து முடிக்கப்பட்டால் எதிர்கால நியூசிலாந்தின் வரலாறு மாற்றியமைக்கப்படும். எங்களது நாட்டில் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட 16-24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள்/இளம்பெண்களில் சுமார் 87 சதவிகிதம் பேர் சமூகத்திற்கு புறம்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடமை
எனவே எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பது அரசின் கடமை. அதனால்தான் இந்த திட்டத்தை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். காதலிக்கும்போது இருவரின் பரஸ்பர அன்பு எப்படி முக்கியமானதோ அதேபோல காதல் பிரிவிலும் இருவரின் ஒத்துழைப்பும் அவசியமானதாகும்" என்று கூறியுள்ளார். இந்த உலகம் நாம் நினைப்பதைவிட மிகப்பெரியது. காதல் தோல்வி இந்த உலகத்தை மீண்டும் ஒருமுறை சுற்றிப்பார்த்து புரிந்துக்கொள்வதற்கு கிடைத்த வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று எழுத்தாளர்கள் பலர் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications