90’ஸ் கிட்ஸ் மன்மதராசா! 9 பெண்களுடன் திருமணம்! டைம் டேபிள் போட்டு தாம்பத்யம்! அநியாயம் பன்றீங்களேயா!
ரியோ டி ஜெனிரோ : பிரேசில் நாட்டில் 9 பெண்களை திருமணம் செய்ததோடு டைம் டேபிள் போட்டு அவர்களுடன் தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்து வந்த பிரபல மாடல் ஒருவர் தற்போது புதிய சிக்கலால் நிம்மதி இழந்துள்ளதாக புலம்பி வரும் சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது சமூக வலைதளங்களில் 90'ஸ் கிட்ஸ் எனப்படும் 90களில் பிறந்த ஆண்களுக்கு இன்னும் திருமணம் நடக்காத நிலையில் அவர்களை அவர் நண்பர்கள் கலாய்த்து வருவது அனைவருக்குமே தெரியும்.
ஒரு திருமணமே நடக்க வழியின்றி பலர் வேதனையில் புலம்பித் தள்ளி வரும் இந்தச் சூழலில் ஒருவர் 9 பெண்களை மணந்து அதுவும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

9 மனைவிகளுடன் வாழ்க்கை
ஆனால் உண்மை அதுதான் பிரேசிலைச் சேர்ந்த பிரபல மாடலான ஆர்தர் ஊர்ஸோ என்ற நபர் உண்மையாகவே 9 பெண்களை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். டைம் டேபிள் போட்டு அவர்களுடன் தாம்பத்திய உறவு வைத்திருந்த இவர், தற்போது தனது 9 மனைவிகளில் ஒருவர் தன்னிடம் விவாகரத்து கேட்டு இருப்பதாகவும் இந்த முடிவு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக கூறி இருப்பது தான் இன்றைய ஹாட் டாப்பிக்.

ஒரு ஆண்டில் 8 திருமணம்
முதலில் லூயானா கஸாகி என்ற பெண்ணை திருமணம் செய்த ஆர்தர், பின்னர் அடுத்தடுத்து எட்டுப் பெண்களை திருமணம் செய்திருக்கிறார். முதல் மனைவியும் பல ஆண்களுடன் வாழ்க்கையில் இருக்கும் உல்லாச வாழ்க்கை மீது நாட்டம் கொண்டவர் என கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டில் மட்டும் எட்டு பெண்களை திருமணம் செய்த அவருக்கு இதுவரை ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ளது. மற்ற மனைவிகளிடம் இருந்தும் தலா ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார் ஆர்தர் ஊர்ஸோ.

விவாகரத்து கேட்ட ஒரு மனைவி
இந்நிலையில் டைம் டேபிள் முறையாலே தன்னை ஒதுக்குவதாக நினைத்து தனது மனைவி ஒருவர் தன்னிடம் இருந்து விவாகரத்து கேட்பதாகவும் இதனால்தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதாக அவர் கூறியுள்ளார். ஆர்தரிடம் தற்போது விவாகரத்து கோரி இருக்கும் அகதா என்ற பெண் ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண மண வாழ்க்கை சிறந்தது என தற்போது தான் தனக்கு தெரியவந்துள்ளதாகவும், இதனால் ஆறுதலை விட்டுப்பிரிந்து தான் தனது வாழ்க்கையை தனிமையில் கழிக்கப் போவதாகக் கூறி இருக்கிறார்.

மீண்டும் திருமணம் இல்லை
அதே நேரத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே நான் சொந்தமாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்றும் இருந்தாலும் தன் மனைவிகளில் ஒருவர் தன்னை விட்டு பிரிவதை கடினமாக இருந்ததாகவும், ஆனால் மற்ற எட்டு பேரும் ஒற்றுமையாகவே இருக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.அதே நேரத்தில் வேறு பெண்களை மணக்கும் திட்டமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications