Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒருவேளை நாங்க இறந்துட்டா? சிறுமி முதுகில் முகவரி எழுதும் தாய்! காண்போர் நெஞ்சை உலுக்கும் காட்சி!

Subscribe to Oneindia Tamil

கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் போர் காரணமாக தாங்கள் இறந்துவிட்டால் அடையாளம் காணவேண்டும் என்பதற்காக சிறுமியின் முதுகில் தாயொருவர் குடும்ப விபரங்களை எழுதும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

உக்ரைனில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போரின் காரணமாக ரஷ்ய ராணுவத்தினரின் அட்டூழியம் குறித்து நாளுக்கு நாள் திகிலூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த வாரம் தி கார்டியன் வெளியிட்ட செய்தியில் உக்ரைனில் இருந்து குழந்தைகள் தப்பிச் செல்ல முயற்சிக்கும்போது ரஷ்யப் படைகளால் அவர்கள் "மனிதக் கேடயங்களாக" பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

உக்ரைன் போரில் மூர்க்க தாக்குதல்கள் காரணமாக இதுவரை 150 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், செர்னிஹிவ் நகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள நோவி பைகிவ் கிராமத்தில் குழந்தைகள் இல்லாத தொட்டில்கள் சிதறிக் கிடப்பதாக அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகின. பின்னர், உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கு வெளியே புச்சாவில் ஒரே இடத்தில் அதிகளவு மக்கள் புதைக்கப்பட்ட குழி மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

போர் குற்றச்சாட்டு

போர் குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டிய நிலையில் , ரஷ்யா மீது அதிபர் புடினுக்கு எதிராக உலகளாவிய எதிர்ப்புக்கு வழிவகுத்தது. திங்களன்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பிடன் கூறுகையில், "புச்சாவில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். " புடின் ஒரு போர்க் குற்றவாளி." என குற்றம் சாட்டியதுடன் போர் குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

ரஷ்யா மறுப்பு

ரஷ்யா மறுப்பு

ஆனால் புச்சா உட்பட உக்ரைன் நகரங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அங்கு ரஷ்யாவை களங்கப்படுத்த உக்ரைனால் கல்லறைகள் மற்றும் சடலங்கள் போலியாக உருவாக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் போர் காரணமாக தாங்கள் இறந்துவிட்டால் அடையாளம் காணவேண்டும் என்பதற்காக சிறுமியின் முதுகில் தாயொருவர் குடும்ப விபரங்களை எழுதும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

அதிர்ச்சி புகைப்படம்

அதிர்ச்சி புகைப்படம்

ரஷ்யப் படைகளால் தாங்கள் கொல்லப்படுவோம் என்று அஞ்சும் உக்ரைன் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உடல்களில் குடும்ப விவரங்களை எழுதத் தொடங்கியுள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த குழந்தைகளின் புகைப்படங்கள் உலகளவில் பல பத்திரிகையாளர்களால் ட்வீட் செய்யப்படுகின்றன. இந்த காட்சிகள் மோதலின் கொடூரமான யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகின்றன.

Recommended Video

    திடீரென Russia-வை கண்டிக்கும் India..காரணம் Bucha | Oneindia Tamil
    கண்ணீர் தகவல்

    கண்ணீர் தகவல்

    "உக்ரேனிய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உடல்களில் குடும்ப பற்றிய தகவல்களையும், முகவரிரையும் தொடர்புகள் குறித்தும் எழுதுகிறார்கள், அவர்கள் கொல்லப்பட்டு தங்கள் குழந்தை உயிர் பிழைத்தால் அடையாளம் காண்பதற்காக.. ஆனால் ஐரோப்பா இன்னும் எரிவாயு பற்றி விவாதிக்கிறது," என்று பத்திரிகையாளர் அனஸ்டாசியா லாபடினா ட்விட்டரில் எழுதினார். அவர் வெளியிட்டுள்ள படத்தில், உக்ரேனிய சிறுமியின் முதுகில் பெண்ணின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன் அவரது தாயார் எழுதுவது தெரிகிறது. இந்த புகைப்படத்தை சிறுமியின் தாய் சாஷா மகோவி மூன்று நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதை பார்த்து பலரும் " இதயத்தை உடைக்கிறது. வார்த்தைகள் இல்லை." என பதிவிட்டு வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+