For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி சன் செய்தித்தாளின் 3வது பக்கத்தை "குடும்பத்தோடு" பார்க்கலாம்!

Google Oneindia Tamil News

லண்டன்: தனது நீண்ட கால "பாரம்பரியத்தை"க் கைவி்ட்டுள்ளது புகழ் பெற்ற சன் செய்தித்தாள். அப்பத்திரிகையின் 3வது பக்கம் மிகப் பிரபலமானது - அதாவது அந்தப் பக்கத்தில் எப்போதுமே ஏதாவது அரை நிர்வாணப் படம்தான் இடம் பெறும். தற்போது அந்த வழக்கத்திற்கு விடை கொடுத்துள்ளது சன்.

கடந்த பல ஆண்டுகளாகவே சன் செய்தித்தாளின் 3வது பக்கத்தைப் புரட்டினாலே ஏதாவது ஒரு அரை நிர்வாணப்படம்தான் அலங்கரிக்கும். டாப்லெஸ் பெண்களின் படம்தான் நீக்கமற நிறைந்திருக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சன். இதை இங்கிலாந்தில் பெண்கள் அமைப்புகள் பலவும் வரவேற்றுள்ளன.

The Sun covers them up, ending Page 3 topless tradition

ரூபர்ட் முர்டோச்சுக்குச் சொந்தமான டைம்ஸ் நிறுவனம்தான் சன் இதழையும் நிர்வகித்து வருகிறது. கடந்த 44 வருடமாக இருந்து வந்த வழக்கத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமையுடன் விடை கொடுத்து வி்ட்டதாக கூறியுள்ளது டைம்ஸ்.

இதுகுறித்து டைம்ஸ் நிறுவனம் கூறுகையில், இனிமேல் சன் இதழின் 3வது பக்கத்தில் டாப்லெஸ் படங்கள் இடம் பெறாது. இந்த வழக்கம் மிகவும் பழமையாகி விட்டதாக ரூபர்ட் முர்டோச் கருதுவதால் இதை நிறுத்தி விட்டோம் என்று கூறியுள்ளது.

சன்னின் இந்த முடிவை இங்கிலாந்து மகளிர் மற்றும் சம உரிமைத் துறை அமைச்சர் நிக்கி மோர்கன் வரவேற்றுள்ளார். இது நீண்ட கால கோரிக்கை. இந்த நடவடிக்கை பெண்களுக்கு மிகவும் கவுரவம் தருவதாகும் என்று நிக்கி கூறியுள்ளார். இந்த முடிவை சன் தொடர வேண்டும், மாற்றி விடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 20.2 லட்சம் சர்க்குலேஷன் கொண்டது சன். தற்போது பிரிண்ட் வெர்ஷனில் மட்டுமே அது டாப்லெஸ் படங்களுக்கு விடை கொடுத்துள்ளது. அதேசமமயம், அதன் இணையதள வெர்ஷனில் இது தொடருமாம்.

இதையும் அது தனது பிரிண்ட் வெர்ஷன் இதழில் தெரிவித்துள்ளது. கடந்த 1970ம் ஆண்டு முதல் தனது மூன்றாவது பக்கத்தில் அரை நிர்வாணப் படங்களை அது போட்டு வருகிறது. பேஜ் 3 கேர்ள் என்றே அந்தப் பக்கத்தில் இடம் பெறும் பெண்களும் பிரபலமானார்கள். இந்த 3வது பக்கத்திற்கு முதலில் அரை நிர்வாண போஸ் கொடுத்த பெருமைக்குரியவர் அன்றைக்கு 20 வயதான ஜெர்மனி அழகி ஸ்டெபானி ராஹன். அன்று முதல் இந்த 3வது பக்கம் இங்கிலாந்து ஆண்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது.

இந்த ஆபாசப் படங்களை பிரசுரிப்பதை நிறுத்துமாறு பலரும் பலமுறை சன்னுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சன் அதை கண்டு கொள்ளவே இல்லை. இப்போதுதான் அது தனது வழக்கத்தை நிறுத்தியுள்ளது.

English summary
The Sun newspaper has quietly ended a decades-old tradition of putting topless women on page 3 in a setback for schoolboy fantasies that was welcomed by women around the country. The Times, which like The Sun is owned by billionaire media tycoon Rupert Murdoch's News UK, said on Tuesday that last Friday's edition of the tabloid was the last to feature a nude model after 44 years. "The Sun will no longer feature topless models on page 3," The Times said, adding that the change had been on the cards since billionaire Murdoch last year described the custom as "old fashioned".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X