தொடர்ந்து 2வது முறையாக... உலகிலேயே செலவு மிகுந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு
சிங்கப்பூர்: உலகிலேயே செலவு மிகுந்த நகரமாக சிங்கப்பூர் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 93 நாடுகளில் உள்ல 140 நகரங்கள் குறித்து ஆராயப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் உலகிலேயே செலவு மிகுந்த நகரமாக சிங்கப்பூர் இருப்பது தெரிய வந்துள்ளது. பாரீஸ், ஓஸ்லோ, ஜூரிச், சிட்னி ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

கடந்த முறை நடத்தப்பட்ட ஆய்விலும், இதே நகரங்கள் இதே இடங்களைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் உள்ள பலசரக்கு சாமான்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளதை விட 11 சதவீதமும், துணிமணிகள் 50 சதவீதமும் அதிக விலை ஆகும். மேலும், சிங்கப்பூரில் கார் வைத்திருப்பதற்கு சான்றிதழ் பெறும் முறை உள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து செலவு, நியூயார்க்கை விட மூன்று மடங்கு அதிகமாக போய்விட்டது.
மேற்கூறிய காரணங்களால் உலகில் அதிக செலவு மிகுந்த நகரமாக சிங்கப்பூர் விளங்குவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications