Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகின் மிக வயதானவர் 117 வயதில் காலமானார்.. ஸ்பெயினின் மரியா பிரான்யாஸ் குறித்து வியப்பான தகவல்

Subscribe to Oneindia Tamil

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா பிரான்யாஸ் என்பவர் தான் உலகின் மிக வயதான நபர் என்று சொல்லப்படுகிறது. இவர் தனது 117 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களை பார்த்ததுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை பார்த்தவர் இப்போது உயிருடன் இல்லை.

இந்த உலகின் 100 வருடம் வாழ்வது என்பது இன்றைய வாழ்க்கை சூழலில சாத்தியமே இல்லை.. 25 வயதிலேயே மாரடைப்பு முதல் சர்க்கரை வியாதி எல்லாம் வருகிறது. 40 வயதை கடந்தால் உடலில் சர்க்கரை அளவு குறைவது அல்லது அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் பலருக்கு வருகிறது. 100 வயது வாழ்வது என்பது மிக அரிதான ஒன்றாக மாறி உள்ளது.

world international Spain

என்னதான் மருத்துவ துறையில் மிக அதிநவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும், அதிநவீன சிகிச்சை முறைகள் இருந்தாலும், பார்த்து பார்த்து சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து வாழ்ந்தாலும் விதி எப்போது முடிகிறதோ, அதுபடியே நடக்கிறது. ஒருவரின் இறப்பை எதனாலும் கணிக்க முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில் வெகுசிலரே 100 வருடங்கள் கடந்து வாழ்கிறார்கள். அந்த வகையில் உலகிலேயே வயதான பெண்ணான இரண்டு உலகப் போர்களை பார்த்ததுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாணியிலான பெரும் காய்ச்சல் தொற்று மற்றும் 2020ல் ஏற்பட்ட கோவிட் தொற்று உள்ளிட்ட எல்லாவற்றையும் பார்த்தவர் இறந்துவிட்டார்.

இதுபற்றி அவரது குடும்பத்தினர் வெளியிட்ட பதிவில், "மரியா பிரான்யாஸ் இப்போது எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். அவர் விரும்பியபடியே தூக்ககத்திலும், அமைதியாகவும் வலிகள் இன்றியும் இப்போது இறந்துவிட்டார். அவர் எங்களுக்கு தந்த அறிவுரை மற்றும் அன்புகளுக்காக நாங்கள் எப்போதும் அவரை நினைவில் வைத்திருப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.

மரியா பிரான்யாஸ் கடந்த 1907ம் ஆண்டு, மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அவர் சிறுவயது இருக்கும் போதே அவரது குடும்பம் ஸ்பெயினுக்கு சென்றுவிட்டார்கள. ஸ்பெயினின் கட்டலோனியாவில் குடியேறினார்கள். மரியா கடந்த 1931ல் ஜோன் மோரெட்டை மணந்தார். அவருக்கு ஒரு பெண் உள்பட மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு 11 பேரக் குழந்தைகள் பிறந்தர் பின்னர் அவர்கள் வழியில் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்.

மரியா பிரானியாஸ் கடந்த மார்ச் 4, 2023இல் தனது 116வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் உள்ள சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மரியா பிரானியாஸ் இன்று காலமாகி உள்ளார்.இதன் மூலம் உலகிலேயே அதிக வயதான பெண்ணான மரியா பிரானியாஸ் 117ஆவது வயதில் இறந்துள்ளார்

மரியா பிரான்ஸியாஸின் மரணத்தைத் தொடர்ந்து, உலகின் மிக வயதான நபர் ஜப்பானைச் சேர்ந்த டோமிகா இடூகோ என்ற பெண்மணி இருப்பார் என்று தெரிகிறது. இவர் 1908ம் ஆண்டு மே மாதம் பிறந்தவர். தற்போது அவருக்கு 116 வயது ஆவதாக ஜெரண்டாலஜி ஆராய்ச்சி குழு கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+